Skip to content

பாடல் 305 · பாடல் 305

Song 305

pāṭal 305

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

தறையின் மானுட ராசையி னால்மட லெழுது மாலருள் மாதர்கள் தோதக சரசர் மாமல ரோதியி னாலிரு ...... கொங்கையாலுந்

taṟaiyiṉ māṉuṭa rācaiyi ṉālmaṭa leḻutu mālaruḷ mātarkaḷ tōtaka caracar māmala rōtiyi ṉāliru ...... koṅkaiyālun

Report an error

தளர்மி னேரிடை யாலுடை யால்நடை யழகி னால்மொழி யால்விழி யால்மருள் சவலை நாயடி யேன்மிக வாடிம ...... யங்கலாமோ

taḷarmi ṉēriṭai yāluṭai yālnaṭai yaḻaki ṉālmoḻi yālviḻi yālmaruḷ cavalai nāyaṭi yēṉmika vāṭima ...... yaṅkalāmō

Report an error

பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக ளணுகொ ணாவகை நீடுமி ராசிய பவன பூரக வேகிக மாகிய ...... விந்துநாதம்

paṟavai yāṉameyñ ñāṉikaḷ mōṉika ḷaṇuko ṇāvakai nīṭumi rāciya pavaṉa pūraka vēkika mākiya ...... vintunātam

Report an error

பகரொ ணாதது சேரவொ ணாதது நினையொ ணாதது வானத யாபர பதிய தானச மாதிம னோலயம் ...... வந்துதாராய்

pakaro ṇātatu cēravo ṇātatu niṉaiyo ṇātatu vāṉata yāpara patiya tāṉaca mātima ṉōlayam ...... vantutārāy

Report an error

சிறைவி டாதநி சாசரர் சேனைகள் மடிய நீலக லாபம தேறிய திறல்வி நோதச மேளத யாபர ...... அம்புராசித்

ciṟaivi ṭātani cācarar cēṉaikaḷ maṭiya nīlaka lāpama tēṟiya tiṟalvi nōtaca mēḷata yāpara ...... ampurācit

Report an error

திரைகள் போலலை மோதிய சீதள குடக காவிரி நீளலை சூடிய திரிசி ராமலை மேலுறை வீரகு ...... றிஞ்சிவாழும்

tiraikaḷ pōlalai mōtiya cītaḷa kuṭaka kāviri nīḷalai cūṭiya tirici rāmalai mēluṟai vīraku ...... ṟiñcivāḻum

Report an error

மறவர் நாயக ஆதிவி நாயக ரிளைய நாயக காவிரி நாயக வடிவி னாயக ஆனைத னாயக ......எங்கள்மானின்

maṟavar nāyaka ātivi nāyaka riḷaiya nāyaka kāviri nāyaka vaṭivi ṉāyaka āṉaita ṉāyaka ......eṅkaḷmāṉiṉ

Report an error

மகிழு நாயக தேவர்கள் நாயக கவுரி நாயக னார்குரு நாயக வடிவ தாமலை யாவையு மேவிய ...... தம்பிரானே.

makiḻu nāyaka tēvarkaḷ nāyaka kavuri nāyaka ṉārkuru nāyaka vaṭiva tāmalai yāvaiyu mēviya ...... tampirāṉē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).