Skip to content

பாடல் 307 · பாடல் 307

Song 307

pāṭal 307

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள் அபகட மகபாவிகள் ...... விரகாலே

alaikaṭal nikarākiya viḻikoṭu valaivīcikaḷ apakaṭa makapāvikaḷ ...... virakālē

Report an error

அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள் அசடரொ டுறவாடிகள் ...... அநியாயக்

ativita matarāyata nitamoḻi palakūṟikaḷ acaṭaro ṭuṟavāṭikaḷ ...... aniyāyak

Report an error

கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் கருதிடு கொடியாருட ...... னினிதாகக்

kalaipakar vilaimātarkaḷ iḷaiñarkaḷ kuṭikēṭikaḷ karutiṭu koṭiyāruṭa ...... ṉiṉitākak

Report an error

கனதன முலைமேல்விழு கபடனை நி முடனை கழலிணை பெறவேயினி ...... யருள்வாயே

kaṉataṉa mulaimēlviḻu kapaṭaṉai ni muṭaṉai kaḻaliṇai peṟavēyiṉi ...... yaruḷvāyē

Report an error

அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் ...... குருநாதா

alaipuṉal talaicūṭiya pacupati makaṉākiya aṟumuka vaṭivē aruḷ ...... kurunātā

Report an error

அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற அதிரிடும் வடிவேல்விடு ...... மதிசூரா

acurarkaḷ kuṭiyēkeṭa amararkaḷ patiyēpeṟa atiriṭum vaṭivēlviṭu ...... maticūrā

Report an error

தலையய னறியாவொரு சிவகுரு பரனேயென தரணியி லடியார்கண ...... நினைவாகா

talaiyaya ṉaṟiyāvoru civakuru paraṉēyeṉa taraṇiyi laṭiyārkaṇa ...... niṉaivākā

Report an error

சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய தடமயில் தனிலேறிய ...... பெருமாளே.

cakalamu mutalākiya aṟupati nilaimēviya taṭamayil taṉilēṟiya ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).