Skip to content

பாடல் 314 · பாடல் 314

Song 314

pāṭal 314

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

புனமடந் தைக்குத் தக்கபு யத்தன் குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும் பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் ...... பிறிதேதும்

puṉamaṭan taikkut takkapu yattaṉ kumaraṉeṉ ṟettip pattartu tikkum poruḷaineñ cattuk kaṟpaṉai muṟṟum ...... piṟitētum

Report an error

புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம் சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் ...... தனைநாளும்

pukalumeṇ patteṭ ṭeṭṭiyal tatvam cakalamum paṟṟip paṟṟaṟa niṟkum potuvaiyeṉ ṟokkat takkato rattan ...... taṉaināḷum

Report an error

சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண் டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந் தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் ...... செயல்பாடித்

ciṉamuṭaṉ tarkkit tuccilu kikkoṇ ṭaṟuvaruṅ kaikkut tiṭṭoru varkkun terivarum catyat taitteri cittuṉ ...... ceyalpāṭit

Report an error

திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந் திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ் சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே

ticaitoṟuṅ kaṟpik kaikkiṉi yaṟpan tiruvuḷam paṟṟic ceccaima ṇakkuñ ciṟucataṅ kaippoṟ patmame ṉakkeṉ ...... ṟaruḷvāyē

Report an error

கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம் கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண் கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் ...... திருவாயன்

kaṉaperun toppaik keṭpori yappam kaṉikiḻaṅ kikkuc carkkarai mukkaṇ kaṭalaikaṇ ṭappip piṭṭoṭu mokkum ...... tiruvāyaṉ

Report an error

கவளதுங் கக்கைக் கற்பக முக்கண் திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன் கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் ...... றனையீனும்

kavaḷatuṅ kakkaik kaṟpaka mukkaṇ tikaḻunaṅ koṟṟat toṟṟaima ruppaṉ karimukaṉ citrap poṟpukar veṟpaṉ ...... ṟaṉaiyīṉum

Report an error

பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண் கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண் பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் ...... பணிவாரைப்

paṉaviyoṉ ṟeṭṭuc cakrata lappeṇ kavuricem poṟpaṭ ṭuttari yappeṇ paḻayaaṇ ṭattaip peṟṟama ṭappeṇ ...... paṇivāraip

Report an error

பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும் பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம் பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.

pavataraṅ kattait tappani ṟuttum pavatikam parkkup pukkavaḷ pakkam payilvaram peṟṟuk kacciyil niṟkum ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).