Skip to content

பாடல் 316 · பாடல் 316

Song 316

pāṭal 316

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

செறிதரும் செப்பத் துற்பல வெற்பும் பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ் சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ் ...... சுடர்வேலும்

ceṟitarum ceppat tuṟpala veṟpum piṟitumaṅ kattaik kuṟṟavi ruppuñ cikarituṇ ṭikkak kaṟṟata ṉicceñ ...... cuṭarvēlum

Report an error

திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந் தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம் திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும் ...... படிநாடும்

tiraḷpuyaṅ kottup paṭṭava ṉaittun teḷiyaneñ cattup puṟṟuma yakkam tikaḻprapañ cattaip puṟputa mokkum ...... paṭināṭum

Report an error

அறிவறிந் தத்தற் கற்றது செப்புங் கடவுளன் பத்தர்க கச்சம றுத்தன் பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும் ...... பெருமானென்

aṟivaṟin tattaṟ kaṟṟatu ceppuṅ kaṭavuḷaṉ pattarka kaccama ṟuttaṉ paruḷpavaṉ poṟpuk kacciyuḷ niṟkum ...... perumāṉeṉ

Report an error

றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின் செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென் றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் ...... றருள்வாயே

ṟaviḻumaṉ puṟṟuk kaṟṟuma ṉattiṉ ceyaloḻin teṭṭap paṭṭata ṉaicceṉ ṟaṭaitarum pakvat taittami yeṟkeṉ ...... ṟaruḷvāyē

Report an error

குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும் பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன் குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ் ...... சிறுபாலன்

kuṟiyavaṉ ceppap paṭṭae varkkum periyavaṉ kaṟpik kappaṭu cukraṉ kulaikulain tuṭkak catyami ḻaṟṟuñ ...... ciṟupālaṉ

Report an error

குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங் கனகனங் கத்திற் குத்திநி ணச்செங் குடர்பிடுங் கித்திக் குற்றமு கச்சிங் ...... கமுராரி

kutalaiyiṉ coṟkut tarkkamu raikkuṅ kaṉakaṉaṅ kattiṟ kuttini ṇacceṅ kuṭarpiṭuṅ kittik kuṟṟamu kacciṅ ...... kamurāri

Report an error

பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண் துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம் புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன் ...... ஜகதாதை

poṟiviṭun tuttik kaṭcevi yiṟkaṇ tuyilkoḷuñ cakrak kaikkiri cuttam puyaleṉum poṟpup peṟṟani ṟattaṉ ...... jakatātai

Report an error

புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன் பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண் புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும் ...... பெருமாளே.

puṉitacaṅ kattuk kaittala nirttaṉ paḻaiyacan tattaip peṟṟama ṭappeṇ pukalukoṇ ṭaṟkuc cittiya ḷikkum ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).