அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர் அசடர்பேய்க் கத்தர் நன்றி ...... யறியாத
aṟivilāp pitta ruṉṟa ṉaṭitoḻāk keṭṭa vañcar acaṭarpēyk kattar naṉṟi ...... yaṟiyāta
பாடல் 352 · பாடல் 352
pāṭal 352
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர் அசடர்பேய்க் கத்தர் நன்றி ...... யறியாத
aṟivilāp pitta ruṉṟa ṉaṭitoḻāk keṭṭa vañcar acaṭarpēyk kattar naṉṟi ...... yaṟiyāta
அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து அவரைவாழ்த் தித்தி ரிந்து ...... பொருள்தேடிச்
avalarmēṟ coṟkaḷ koṇṭu kavikaḷāk kippu kaḻntu avaraivāḻt titti rintu ...... poruḷtēṭic
சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து தெரிவைமார்க் குச்சொ ரிந்து ...... அவமேயான்
ciṟitukūṭ ṭikko ṇarntu teruvulāt titti rintu terivaimārk kucco rintu ...... avamēyāṉ
திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து தெளியமோ க்ஷத்தை யென்று ...... அருள்வாயே
tiriyumārk kattu nintai yataṉaimāṟ ṟippa rintu teḷiyamō kṣattai yeṉṟu ...... aruḷvāyē
இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து இடபமேற் கச்சி வந்த ...... உமையாள்தன்
iṟaivarmāṟ ṟaṟṟa cempoṉ vaṭivamvēṟ ṟuppi rintu iṭapamēṟ kacci vanta ...... umaiyāḷtaṉ
இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த இறைவர்கேட் கத்த குஞ்சொ ...... லுடையோனே
iruḷainīk katta vañcey taruḷanōk kikku ḻainta iṟaivarkēṭ katta kuñco ...... luṭaiyōṉē
குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று குருவியோட் டித்தி ரிந்த ...... தவமானைக்
kuṟavarkūṭ ṭattil vantu kiḻavaṉāyp pukku niṉṟu kuruviyōṭ ṭitti rinta ...... tavamāṉaik
குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த குமரகோட் டத்த மர்ந்த ...... பெருமாளே.
kuṇamatāk kicci ṟanta vaṭivukāṭ ṭippu ṇarnta kumarakōṭ ṭatta marnta ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).