Skip to content

பாடல் 354 · பாடல் 354

Song 354

pāṭal 354

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய ஐந்தலை நாகப் பூஷண ...... ரருள்பாலா

ampuli nīraic cūṭiya ceñcaṭai mītiṟ ṟāviya aintalai nākap pūṣaṇa ...... raruḷpālā

Report an error

அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு மங்கையி னானிற் பூசையு ...... மணியாமல்

aṉpuṭa ṉāviṟ pāvatu cantata mōtip pātamu maṅkaiyi ṉāṉiṟ pūcaiyu ...... maṇiyāmal

Report an error

வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில் வண்டுழ லோதித் தாழலி ...... லிருகாதில்

vampaṇi pārap pūṇmulai vañciyar māyac cāyalil vaṇṭuḻa lōtit tāḻali ...... lirukātil

Report an error

மண்டிய நீலப் பார்வையில் வெண்துகி லாடைச்சேர்வையில் மங்கியெ யேழைப் பாவியெ ...... னழிவேனோ

maṇṭiya nīlap pārvaiyil veṇtuki lāṭaiccērvaiyil maṅkiye yēḻaip pāviye ...... ṉaḻivēṉō

Report an error

கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி குண்டலி யாலப் போசனி ...... யபிராமி

kompaṉai nīlak kōmaḷai ampuya mālaip pūṣaṇi kuṇṭali yālap pōcaṉi ...... yapirāmi

Report an error

கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி குன்றது வார்பொற் காரிகை ...... யருள்பாலா

koñciya vāṉac cāṉavi caṅkari vētap pārvati kuṉṟatu vārpoṟ kārikai ...... yaruḷpālā

Report an error

செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை திண்புய மாரப் பூரண ...... மருள்வோனே

cempava ḷāyak kūritaḻ miṉkuṟa māṉaip pūṇmulai tiṇpuya mārap pūraṇa ...... maruḷvōṉē

Report an error

செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய தென்திரு வானைக் காவுறை ...... பெருமாளே.

centamiḻ pāṇap pāvalar caṅkita yāḻaip pāṭiya teṉtiru vāṉaik kāvuṟai ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).