Skip to content

பாடல் 361 · பாடல் 361

Song 361

pāṭal 361

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

காவிப் பூவை யேவை யிகல்கவன நீலத் தால கால நிகர்வன காதிப் போக மோக மருள்வன ...... இருதோடார்

kāvip pūvai yēvai yikalkavaṉa nīlat tāla kāla nikarvaṉa kātip pōka mōka maruḷvaṉa ...... irutōṭār

Report an error

காதிற் காதி மோதி யுழல்கண மாயத் தார்கள் தேக பரிசன காமக் ரோத லோப மப மிவை ...... சிதையாத

kātiṟ kāti mōti yuḻalkaṇa māyat tārkaḷ tēka paricaṉa kāmak rōta lōpa mapa mivai ...... citaiyāta

Report an error

பாவிக் காயு வாயு வலம்வர லாலிப் பார்கள் போத கருமவு பாயத் தான ஞான நெறிதனை ...... யினிமேலன்

pāvik kāyu vāyu valamvara lālip pārkaḷ pōta karumavu pāyat tāṉa ñāṉa neṟitaṉai ...... yiṉimēlaṉ

Report an error

பாலெக் காக யோக ஜெபதப நேசித் தார வார பரிபுர பாதத் தாளு மாறு திருவுள ...... நினையாதோ

pālek kāka yōka jepatapa nēcit tāra vāra paripura pātat tāḷu māṟu tiruvuḷa ...... niṉaiyātō

Report an error

கூவிக் கோழி வாழி யெனமயி லாலித் தால கால மெனவுயர் கூளிச் சேனை வான மிசைதனில் ...... விளையாடக்

kūvik kōḻi vāḻi yeṉamayi lālit tāla kāla meṉavuyar kūḷic cēṉai vāṉa micaitaṉil ...... viḷaiyāṭak

Report an error

கோரத் தீர சூர னுடைவினை பாறச் சீற லேன பதிதனை கோலக் கால மாக அமர்செய்த ...... வடிவேலா

kōrat tīra cūra ṉuṭaiviṉai pāṟac cīṟa lēṉa patitaṉai kōlak kāla māka amarceyta ...... vaṭivēlā

Report an error

ஆவிச் சேல்கள் பூக மடலிள பாளைத் தாறு கூறு படவுய ராலைச் சோலை மேலை வயலியி ...... லுறைவோனே

āvic cēlkaḷ pūka maṭaliḷa pāḷait tāṟu kūṟu paṭavuya rālaic cōlai mēlai vayaliyi ...... luṟaivōṉē

Report an error

ஆசைத் தோகை மார்க ளிசையுட னாடிப் பாடி நாடி வருதிரு ஆனைக் காவில் மேவி யருளிய ...... பெருமாளே.

ācait tōkai mārka ḷicaiyuṭa ṉāṭip pāṭi nāṭi varutiru āṉaik kāvil mēvi yaruḷiya ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).