Skip to content

பாடல் 38 · பாடல் 38

Song 38

pāṭal 38

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

4 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம் இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள் கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடே

kaṭṭaḻaku viṭṭut taḷarntaṅ kiruntumuṉam iṭṭapoṟi tappip piṇaṅkoṇṭa tiṉcilarkaḷ kaṭṭaṇame ṭuttuc cumantum perumpaṟaikaḷ ...... muṟaiyōṭē

Report an error

வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ

veṭṭaviṭa veṭṭak kiṭañcaṅ kiṭañcameṉa makkaḷoru mikkat toṭarntum puraṇṭumvaḻi viṭṭuvaru mittait tavirntuṉ pataṅkaḷuṟa ...... vuṇarvēṉō

Report an error

பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல் முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ...... முடிசாயத்

paṭṭuruvi neṭṭaik kravuñcam piḷantukaṭal muṟṟumalai vaṟṟik kuḻampuṅ kuḻampamuṉai paṭṭaayil toṭṭut tiṭaṅkoṇ ṭetirntavuṇar ...... muṭicāyat

Report an error

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை ...... பெருமாளே.

taṭṭaḻiya veṭṭik kavantam peruṅkaḻuku nirttamiṭa rattak kuḷaṅkaṇ ṭumiḻntumaṇi caṟcamaya vittaip palaṉkaṇṭu centiluṟai ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).