ஆலவிழி நீலத் தாலதர பானத் தாலளக பாரக் ...... கொண்டலாலே
ālaviḻi nīlat tālatara pāṉat tālaḷaka pārak ...... koṇṭalālē
பாடல் 382 · பாடல் 382
pāṭal 382
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
ஆலவிழி நீலத் தாலதர பானத் தாலளக பாரக் ...... கொண்டலாலே
ālaviḻi nīlat tālatara pāṉat tālaḷaka pārak ...... koṇṭalālē
ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித் தாரநடை யால்நற் ...... கொங்கையாலே
āranakai yālviṟ pōrnutali ṉālvit tāranaṭai yālnaṟ ...... koṅkaiyālē
சாலமய லாகிக் காலதிரி சூலத் தாலிறுகு பாசத் ...... துன்ப்முழ்கித்
cālamaya lākik kālatiri cūlat tāliṟuku pācat ...... tuṉpmuḻkit
தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற் சாவதன்மு னேவற் ...... கொண்டிடாயோ
tāḻviluyir vīḻpaṭ ṭūḻviṉaivi ṭāmaṟ cāvataṉmu ṉēvaṟ ...... koṇṭiṭāyō
சோலைதரு கானிற் கோலமற மானைத் தோளிலுற வாகக் ...... கொண்டவாழ்வே
cōlaitaru kāṉiṟ kōlamaṟa māṉait tōḷiluṟa vākak ...... koṇṭavāḻvē
சோதிமுரு காநித் தாபழய ஞானச் சோணகிரி வீதிக் ...... கந்தவேளே
cōtimuru kānit tāpaḻaya ñāṉac cōṇakiri vītik ...... kantavēḷē
பாலகக லாபக் கோமளம யூரப் பாகவுமை பாகத் ...... தன்குமாரா
pālakaka lāpak kōmaḷama yūrap pākavumai pākat ...... taṉkumārā
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப் பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.
pātamalar mītiṟ pōtamalar tūvip pāṭumavar tōḻat ...... tampirāṉē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).