கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக் கஜமுகத் தவுணனைக் ...... கடியானை
karimukak kaṭakaḷiṟ ṟatikakaṟ pakamatak kajamukat tavuṇaṉaik ...... kaṭiyāṉai
பாடல் 409 · பாடல் 409
pāṭal 409
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக் கஜமுகத் தவுணனைக் ...... கடியானை
karimukak kaṭakaḷiṟ ṟatikakaṟ pakamatak kajamukat tavuṇaṉaik ...... kaṭiyāṉai
கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக் கனிவயிற் றினிலடக் ...... கியவேழம்
kaṭalaiyeṭ payaṟunaṟ kataliyiṟ kaṉipalak kaṉivayiṟ ṟiṉilaṭak ...... kiyavēḻam
அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத் தமர்புரிக் கணபதிக் ...... கிளையோனே
arimukat tiṉaṉetirt tiṭukaḷat tiṉiṉmikut tamarpurik kaṇapatik ...... kiḷaiyōṉē
அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற் றியைமிகுத் தறுமுகக் ...... குமரேசா
ayileṭut tacurarveṟ palaivuṟap porutuveṟ ṟiyaimikut taṟumukak ...... kumarēcā
நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக் கையில்பிடித் தெதிர்நடத் ...... திடுமீசன்
narimikuk kiḷaikaḷaip pariyeṉak kaṭivaḷak kaiyilpiṭit tetirnaṭat ...... tiṭumīcaṉ
நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற் கரியுரித் தணிபவற் ...... கொருசேயே
naṭaṉamip paṭiyiṭat tiṉumicait taraiyiṉiṟ kariyurit taṇipavaṟ ...... korucēyē
துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத் துரியமெய்த் தரளமொய்த் ...... திடவீறிச்
turipeṟac caripoḻiṟ kaṉavayaṟ kaḻakuḷat turiyameyt taraḷamoyt ...... tiṭavīṟic
சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற் சுடரயிற் சரவணப் ...... பெருமாளே.
curartutit tiṭamikut tiyaltaḻait taruṇaiyiṟ cuṭarayiṟ caravaṇap ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).