Skip to content

பாடல் 417 · பாடல் 417

Song 417

pāṭal 417

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று கேவலம தானஅற்ப ...... நினைவாலே

kētakaiya pūmuṭitta mātartama yāliluṟṟu kēvalama tāṉaaṟpa ...... niṉaivālē

Report an error

கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த கேடுறுக வேநினைக்கும் ...... வினையாலே

kēḷviyati lātirukku mūḻviṉaiyi ṉālmikutta kēṭuṟuka vēniṉaikkum ...... viṉaiyālē

Report an error

வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில் மேதினியெ லாமுழற்று ...... மடியேனை

vētaṉaiyi lēmikutta pātakaṉu māyavattil mētiṉiye lāmuḻaṟṟu ...... maṭiyēṉai

Report an error

வீடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து வீறுமயில் மீதிலுற்று ...... வருவாயே

vīṭutavi yāḷaveṟṟi vēlkarama tēyeṭuttu vīṟumayil mītiluṟṟu ...... varuvāyē

Report an error

நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து நீடுபுகழ் தேவரிற்கள் ...... குடியேற

nītineṟi yēyaḻitta tārukaṉai vēraṟuttu nīṭupukaḻ tēvariṟkaḷ ...... kuṭiyēṟa

Report an error

நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த நீலநிற மால்தனக்கு ...... மருகோனே

nīṭaruḷi ṉālviṭutta pālakuma rāceḻitta nīlaniṟa māltaṉakku ...... marukōṉē

Report an error

சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள் சோபைவட கோபுரத்தி ...... லுறைவோனே

cōtiyaṉa lāvutitta cōṇakiri māmalaikkuḷ cōpaivaṭa kōpuratti ...... luṟaivōṉē

Report an error

சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி தோளின்மிசை வாளெடுத்த ...... பெருமாளே.

cōṉaimaḻai pōletirtta tāṉavarkaḷ māḷaveṟṟi tōḷiṉmicai vāḷeṭutta ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).