வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு மேருகிரி யானகொடு ...... தனபார
vīṟupuḻu kāṉapaṉi nīrkaḷmala tōyalviṭu mērukiri yāṉakoṭu ...... taṉapāra
பாடல் 445 · பாடல் 445
pāṭal 445
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு மேருகிரி யானகொடு ...... தனபார
vīṟupuḻu kāṉapaṉi nīrkaḷmala tōyalviṭu mērukiri yāṉakoṭu ...... taṉapāra
மீதுபுர ளாபரண சோதிவித மானநகை மேகமனு காடுகட ...... லிருள்மேவி
mītupura ḷāparaṇa cōtivita māṉanakai mēkamaṉu kāṭukaṭa ...... liruḷmēvi
நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேதுவள நாணமழி வார்களுட ...... னுறவாடி
nāṟumalar vācamayir nūliṭaiya tētuvaḷa nāṇamaḻi vārkaḷuṭa ...... ṉuṟavāṭi
நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின் ஞானசிவ மானபத ...... மருள்வாயே
nāṭiyatu vēkatiye ṉācuḻalu mōṭaṉainiṉ ñāṉaciva māṉapata ...... maruḷvāyē
கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய கோலமயி லானபத ...... மருள்வோனே
kūṟumaṭi yārkaḷviṉai nīṟupaṭa vēariya kōlamayi lāṉapata ...... maruḷvōṉē
கூடஅர னோடுநட மாடரிய காளியருள் கூருசிவ காமியுமை ...... யருள்பாலா
kūṭaara ṉōṭunaṭa māṭariya kāḷiyaruḷ kūruciva kāmiyumai ...... yaruḷpālā
ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன மாரவிளை யாடிமண ...... மருள்வோனே
āṟumuka māṉanati pālakuṟa mātutaṉa māraviḷai yāṭimaṇa ...... maruḷvōṉē
ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய ஆதியரு ணாபுரியில் ...... பெருமாளே.
ātiraku rāmajaya māliṉmaru kāperiya ātiyaru ṇāpuriyil ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).