Skip to content

பாடல் 458 · பாடல் 458

Song 458

pāṭal 458

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

கதித்துப்பொங் கலுக்கொத்துப் பணைத்துக்கொம் பெனத்தெற்றிக் கவித்துச்செம் பொனைத்துற்றுக் ...... குழலார்பின்

katittuppoṅ kalukkottup paṇaittukkom peṉatteṟṟik kavittuccem poṉaittuṟṟuk ...... kuḻalārpiṉ

Report an error

கழுத்தைப்பண் புறக்கட்டிச் சிரித்துத்தொங் கலைப்பற்றிக் கலைத்துச்செங் குணத்திற்பித் ...... திடுமாதர்

kaḻuttaippaṇ puṟakkaṭṭic cirittuttoṅ kalaippaṟṟik kalaittucceṅ kuṇattiṟpit ...... tiṭumātar

Report an error

பதித்துத்தந் தனத்தொக்கப் பிணித்துப்பண் புறக்கட்டிப் பசப்பிப்பொன் தரப்பற்றிப் ...... பொருள்மாளப்

patittuttan taṉattokkap piṇittuppaṇ puṟakkaṭṭip pacappippoṉ tarappaṟṟip ...... poruḷmāḷap

Report an error

பறித்துப்பின் துரத்துச்சொற் கபட்டுப்பெண் களுக்கிச்சைப் பலித்துப்பின் கசுத்திப்பட் ...... டுழல்வேனோ

paṟittuppiṉ turattuccoṟ kapaṭṭuppeṇ kaḷukkiccaip palittuppiṉ kacuttippaṭ ...... ṭuḻalvēṉō

Report an error

கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற் கொதித்துச்சங் கரித்துப்பற் கடித்துச்சென் றுழக்கித்துக் ...... கசுரோரைக்

katittukkoṇ ṭetirttuppiṟ kotittuccaṅ karittuppaṟ kaṭittucceṉ ṟuḻakkittuk ...... kacurōraik

Report an error

கழித்துப்பண் டமர்க்குச்செப் பதத்தைத்தந் தளித்துக்கைக் கணிக்குச்சந் தரத்தைச்சுத் ...... தொளிர்வேலா

kaḻittuppaṇ ṭamarkkuccep patattaittan taḷittukkaik kaṇikkuccan tarattaiccut ...... toḷirvēlā

Report an error

சிதைத்திட்டம் புரத்தைச்சொற் கயத்தைச்சென் றுரித்துத்தற் சினத்தக்கன் சிரத்தைத்தட் ...... சிவனார்தஞ்

citaittiṭṭam purattaiccoṟ kayattaicceṉ ṟurittuttaṟ ciṉattakkaṉ cirattaittaṭ ...... civaṉārtañ

Report an error

செவிக்குச்செம் பொருட்கற்கப் புகட்டிச்செம் பரத்திற்செய்த் திருச்சிற்றம் பலச்சொக்கப் ...... பெருமாளே.

cevikkuccem poruṭkaṟkap pukaṭṭiccem parattiṟceyt tirucciṟṟam palaccokkap ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).