Skip to content

பாடல் 466 · பாடல் 466

Song 466

pāṭal 466

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டு வளரும் தனத்த ணிந்த ...... மணியாரம்

mataveṅ karikki raṇṭu valukom peṉatti raṇṭu vaḷarum taṉatta ṇinta ...... maṇiyāram

Report an error

வளைசெங் கையிற்சி றந்த வொளிகண் டுநித்தி லங்கு வரருந் திகைத்தி ரங்க ...... வருமானார்

vaḷaiceṅ kaiyiṟci ṟanta voḷikaṇ ṭunitti laṅku vararun tikaitti raṅka ...... varumāṉār

Report an error

விதவிங் கிதப்ரி யங்கள் நகைகொஞ் சுதற்கு ணங்கள் மிகைகண் டுறக்க லங்கி ...... மருளாதே

vitaviṅ kitapri yaṅkaḷ nakaikoñ cutaṟku ṇaṅkaḷ mikaikaṇ ṭuṟakka laṅki ...... maruḷātē

Report an error

விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துனைப்பு கழ்ந்து மிகவிஞ் சுபொற்ப தங்கள் ...... தருவாயே

viṭucaṅ kaiyaṟṟu ṇarntu valamvan tuṉaippu kaḻntu mikaviñ cupoṟpa taṅkaḷ ...... taruvāyē

Report an error

நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த நடநம் பருற்றி ருந்த ...... கயிலாய

natiyun tirukka rantai matiyuñ caṭaikka ṇinta naṭanam paruṟṟi runta ...... kayilāya

Report an error

நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம் நவதுங் கரத்ந முந்து ...... திரடோ ளுஞ்

nakamaṅ kaiyiṟpi ṭuṅku macuraṉ ciratto ṭaṅkam navatuṅ karatna muntu ...... tiraṭō ḷuñ

Report an error

சிதையும் படிக்கொ ரம்பு தனைமுன் தொடுத்த கொண்டல் திறல்செங் கணச்சு தன்றன் ...... மருகோனே

citaiyum paṭikko rampu taṉaimuṉ toṭutta koṇṭal tiṟalceṅ kaṇaccu taṉṟaṉ ...... marukōṉē

Report an error

தினமுங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப ணிந்த திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே.

tiṉamuṅ karuttu ṇarntu curarvan tuṟappa ṇinta tiruvam palatta marnta ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).