குகர மேவுமெய்த் துறவினின் மறவாக் கும்பிட் டுந்தித் ...... தட்முழ்கிக்
kukara mēvumeyt tuṟaviṉiṉ maṟavāk kumpiṭ ṭuntit ...... taṭmuḻkik
பாடல் 47 · பாடல் 47
pāṭal 47
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
குகர மேவுமெய்த் துறவினின் மறவாக் கும்பிட் டுந்தித் ...... தட்முழ்கிக்
kukara mēvumeyt tuṟaviṉiṉ maṟavāk kumpiṭ ṭuntit ...... taṭmuḻkik
குமுத வாயின்முற் றமுதினை நுகராக் கொண்டற் கொண்டைக் ...... குழலாரோ
kumuta vāyiṉmuṟ ṟamutiṉai nukarāk koṇṭaṟ koṇṭaik ...... kuḻalārō
டகரு தூளிகர்ப் புரதன இருகோட் டன்புற் றின்பக் ...... கடலூடே
ṭakaru tūḷikarp purataṉa irukōṭ ṭaṉpuṟ ṟiṉpak ...... kaṭalūṭē
அமிழு வேனைமெத் தெனவொரு கரைசேர்த் தம்பொற் றண்டைக் ...... கழல்தாராய்
amiḻu vēṉaimet teṉavoru karaicērt tampoṟ ṟaṇṭaik ...... kaḻaltārāy
ககன கோளகைக் கணவிரு மளவாக் கங்கைத் துங்கப் ...... புனலாடும்
kakaṉa kōḷakaik kaṇaviru maḷavāk kaṅkait tuṅkap ...... puṉalāṭum
கமல வாதனற் களவிட முடியாக் கம்பர்க் கொன்றைப் ...... புகல்வோனே
kamala vātaṉaṟ kaḷaviṭa muṭiyāk kampark koṉṟaip ...... pukalvōṉē
சிகர கோபுரத் தினுமதி ளினுமேற் செம்பொற் கம்பத் ...... தளமீதும்
cikara kōpurat tiṉumati ḷiṉumēṟ cempoṟ kampat ...... taḷamītum
தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச் செந்திற் கந்தப் ...... பெருமாளே.
teruvi lēyunit tilameṟi yalaivāyc centiṟ kantap ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).