அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம்
avakuṇa virakaṉai vētāḷa rūpaṉai acaṭaṉai macaṭaṉai ācāra īṉaṉai akatiyai maṟavaṉai ātāḷi vāyaṉai ...... añcupūtam
பாடல் 470 · பாடல் 470
pāṭal 470
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம்
avakuṇa virakaṉai vētāḷa rūpaṉai acaṭaṉai macaṭaṉai ācāra īṉaṉai akatiyai maṟavaṉai ātāḷi vāyaṉai ...... añcupūtam
அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழிவரு வீணாதி வீணனை அழுகலை யவிசலை ஆறான வூணனை ...... அன்பிலாத
aṭaiciya cavaṭaṉai mōṭāti mōṭaṉai aḻikaru vaḻivaru vīṇāti vīṇaṉai aḻukalai yavicalai āṟāṉa vūṇaṉai ...... aṉpilāta
கவடனை விகடனை நானாவி காரனை வெகுளியை வெகுவித மூதேவி மூடிய கலியனை அலியனை ஆதேச வாழ்வனை ...... வெம்பிவீழுங்
kavaṭaṉai vikaṭaṉai nāṉāvi kāraṉai vekuḷiyai vekuvita mūtēvi mūṭiya kaliyaṉai aliyaṉai ātēca vāḻvaṉai ...... vempivīḻuṅ
களியனை யறிவுரை பேணாத மாநுட கசனியை யசனியை மாபாத னாகிய கதியிலி தனையடி நாயேனை யாளுவ ...... தெந்தநாளோ
kaḷiyaṉai yaṟivurai pēṇāta mānuṭa kacaṉiyai yacaṉiyai māpāta ṉākiya katiyili taṉaiyaṭi nāyēṉai yāḷuva ...... tentanāḷō
மவுலியி லழகிய பாதாள லோகனு மரகத முழுகிய காகோத ராஜனு மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட ...... னும்பர்சேரும்
mavuliyi laḻakiya pātāḷa lōkaṉu marakata muḻukiya kākōta rājaṉu manuneṟi yuṭaṉvaḷar cōṇāṭar kōṉuṭa ...... ṉumparcērum
மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர் மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர ...... மன்றுளாடும்
makapati pukaḻpuli yūrvāḻu nāyakar maṭamayil makiḻvuṟa vāṉāṭar kōveṉa malaimaka ḷumaitaru vāḻvēma ṉōkara ...... maṉṟuḷāṭum
சிவசிவ ஹரஹர தேவா நமோநம தெரிசன பரகதி யானாய் நமோநம திசையினு மிசையினும் வாழ்வே நமோநம ...... செஞ்சொல்சேருந்
civaciva harahara tēvā namōnama tericaṉa parakati yāṉāy namōnama ticaiyiṉu micaiyiṉum vāḻvē namōnama ...... ceñcolcērun
திருதரு கலவி மணாளா நமோநம திரிபுர மெரிசெய்த கோவே நமோநம ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ...... தம்பிரானே.
tirutaru kalavi maṇāḷā namōnama tiripura mericeyta kōvē namōnama jeyajeya harahara tēvā curātipar ...... tampirāṉē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).