Skip to content

பாடல் 502 · பாடல் 502

Song 502

pāṭal 502

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான சொருபகிரி யிடமேவு ...... முகமாறும்

cuṭaraṉaiya tirumēṉi yuṭaiyaḻaku mutuñāṉa corupakiri yiṭamēvu ...... mukamāṟum

Report an error

சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய துகிரிதழின் மொழிவேத ...... மணம்வீச

curarteriya laḷipāṭa maḻalaikati naṟaipāya tukiritaḻiṉ moḻivēta ...... maṇamvīca

Report an error

அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட அயில்தரமொ டெழில்தோகை ...... மயிலேறி

aṭarpavaḷa voḷipāya ariyapari puramāṭa ayiltaramo ṭeḻiltōkai ...... mayilēṟi

Report an error

அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை அதிசயமெ னருள்பாட ...... வரவேணும்

aṭiyaṉiru viṉainīṟu paṭaamara ritupūrai aticayame ṉaruḷpāṭa ...... varavēṇum

Report an error

விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோட மிடறடைய விடம்வாரி ...... யருள்நாதன்

viṭaiparavi ayaṉmālo ṭamararmuni kaṇamōṭa miṭaṟaṭaiya viṭamvāri ...... yaruḷnātaṉ

Report an error

மினலனைய இடைமாது இடமருவு குருநாதன் மிகமகிழ அநுபூதி ...... யருள்வோனே

miṉalaṉaiya iṭaimātu iṭamaruvu kurunātaṉ mikamakiḻa anupūti ...... yaruḷvōṉē

Report an error

இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி னிணையிளநிர் முலைமார்பி ...... னணைமார்பா

iṭarkalikaḷ piṇiyōṭa eṉaiyumaruḷ kuṟamāti ṉiṇaiyiḷanir mulaimārpi ...... ṉaṇaimārpā

Report an error

இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி யிருடியர்கள் புகழ்ஞான ...... பெருமாளே.

iṉiyamutu pulipāta ṉuṭaṉaravu catakōṭi yiruṭiyarkaḷ pukaḻñāṉa ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).