கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற் கொண்டற் குழலிற் ...... கொடிதான
koṅkaip paṇaiyiṟ cempoṟ ceṟiviṟ koṇṭaṟ kuḻaliṟ ...... koṭitāṉa
பாடல் 51 · பாடல் 51
pāṭal 51
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற் கொண்டற் குழலிற் ...... கொடிதான
koṅkaip paṇaiyiṟ cempoṟ ceṟiviṟ koṇṭaṟ kuḻaliṟ ...... koṭitāṉa
கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற் கொஞ்சுக் கிளியுற் ...... றுறவான
koṉṟaik kaṇaiyop pantak kayaliṟ koñcuk kiḷiyuṟ ...... ṟuṟavāṉa
சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற் சந்திப் பவரைச் ...... சருவாதே
caṅkat toṉiyiṟ ceṉṟiṟ kaṭaiyiṟ cantip pavaraic ...... caruvātē
சந்தப் படியுற் றென்றற் றலையிற் சந்தப் பதம்வைத் ...... தருள்வாயே
cantap paṭiyuṟ ṟeṉṟaṟ ṟalaiyiṟ cantap patamvait ...... taruḷvāyē
அங்கப் படைவிட் டன்றைப் படுகைக் கந்திக் கடலிற் ...... கடிதோடா
aṅkap paṭaiviṭ ṭaṉṟaip paṭukaik kantik kaṭaliṟ ...... kaṭitōṭā
அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற் றஞ்சப் பொருதுற் ...... றொழியாதே
antap poḻiliṟ cantut talaiyuṟ ṟañcap porutuṟ ...... ṟoḻiyātē
செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற் சென்றுற் றவர்தற் ...... பொருளானாய்
ceṅkaik katiruṟ ṟoṉṟak kaṭaliṟ ceṉṟuṟ ṟavartaṟ ...... poruḷāṉāy
சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற் செந்திற் குமரப் ...... பெருமாளே.
cintaik kaṉivait tantap poḻiliṟ centiṟ kumarap ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).