Skip to content

பாடல் 520 · பாடல் 520

Song 520

pāṭal 520

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

பனியின் விந்துளி போலவே கருவினுறு மளவி லங்கொரு சூசமாய் மிளகுதுவர் பனைதெ னங்கனி போலவே பலகனியின் ...... வயறாகிப்

paṉiyiṉ vintuḷi pōlavē karuviṉuṟu maḷavi laṅkoru cūcamāy miḷakutuvar paṉaite ṉaṅkaṉi pōlavē palakaṉiyiṉ ...... vayaṟākip

Report an error

பருவ முந்தலை கீழதாய் நழுவிநில மருவி யொன்பது வாசல்சே ருருவமுள பதுமை யின்செயல் போலவே வளிகயிறி ...... னுடனாடி

paruva muntalai kīḻatāy naḻuvinila maruvi yoṉpatu vācalcē ruruvamuḷa patumai yiṉceyal pōlavē vaḷikayiṟi ...... ṉuṭaṉāṭi

Report an error

மனவி தந்தெரி யாமலே மலசலமொ டுடல்ந கர்ந்தழு தாறியே அனைமுலையின் மயம யின்றொரு பாலனா யிகமுடைய ...... செயல்மேவி

maṉavi tanteri yāmalē malacalamo ṭuṭalna karntaḻu tāṟiyē aṉaimulaiyiṉ mayama yiṉṟoru pālaṉā yikamuṭaiya ...... ceyalmēvi

Report an error

வடிவ முன்செய்த தீமையா லெயுமுனையும் அறம றந்தக மீதுபோய் தினதினமு மனம ழிந்துடல் நாறினே னினியுனது ...... கழல்தாராய்

vaṭiva muṉceyta tīmaiyā leyumuṉaiyum aṟama ṟantaka mītupōy tiṉatiṉamu maṉama ḻintuṭal nāṟiṉē ṉiṉiyuṉatu ...... kaḻaltārāy

Report an error

தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தகுத குந்ததி தாகுதோ வெனமுழவு ...... வளைபேரி

taṉaṉa tantaṉa tāṉaṉā taṉataṉaṉa tiṉaṉa tintaṉa tītatō tikutatiku takuta kuntati tākutō veṉamuḻavu ...... vaḷaipēri

Report an error

தவில்க ணம்பறை காளமோ டிமிலைதொனி யினமு ழங்கெழு வேலைபோ லதிரபொரு சமர்மு கங்களின் மேவியே விருதுசொலு ...... மவுணோர்கள்

tavilka ṇampaṟai kāḷamō ṭimilaitoṉi yiṉamu ḻaṅkeḻu vēlaipō latiraporu camarmu kaṅkaḷiṉ mēviyē virutucolu ...... mavuṇōrkaḷ

Report an error

சினம ழிந்திட தேர்கள் தோலரிபரிகள் குருதி யெண்டிசை மூடவே அலகைநரி சிறையி னங்களி கூரவே நகையருளி ...... விடும்வேலா

ciṉama ḻintiṭa tērkaḷ tōlariparikaḷ kuruti yeṇṭicai mūṭavē alakainari ciṟaiyi ṉaṅkaḷi kūravē nakaiyaruḷi ...... viṭumvēlā

Report an error

சிவன்ம கிழ்ந்திரு ளானைமா முகன்மருவி மனம கிழ்ந்தருள் கூரவோர் கயிலைமகிழ் திகழ்கு றிஞ்சியின் மாதுமால் மருவுபுகழ் ...... பெருமாளே.

civaṉma kiḻntiru ḷāṉaimā mukaṉmaruvi maṉama kiḻntaruḷ kūravōr kayilaimakiḻ tikaḻku ṟiñciyiṉ mātumāl maruvupukaḻ ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).