Skip to content

பாடல் 522 · பாடல் 522

Song 522

pāṭal 522

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந முலைக்கச் சவிழ்த்த சைத்து ...... முசியாதே

mukattaip pilukki metta miṉukkit toṭaittu ratna mulaikkac caviḻtta caittu ...... muciyātē

Report an error

முழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்து மொழிக்குட் படுத்த ழைத்த ...... மளிமீதே

muḻukkak kaḻappi yetti maḻuppip poruṭpa ṟittu moḻikkuṭ paṭutta ḻaitta ...... maḷimītē

Report an error

நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த நயத்திற் கழுத்தி றுக்கி ...... யணைவார்பால்

nakaittiṭ ṭaḻutti mutta maḷittuk kaḷittu metta nayattiṟ kaḻutti ṟukki ...... yaṇaivārpāl

Report an error

நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து நயத்துக் தியக்கி நித்த ...... மழிவேனோ

naṭukkuṟ ṟavarkku metta maṉattaip perukka vaittu nayattuk tiyakki nitta ...... maḻivēṉō

Report an error

செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி ...... யெனஆடும்

cekakkac cekakka cekka tarikkat tarikka takka timittit timitti titti ...... yeṉaāṭum

Report an error

செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த ஜெனத்துக் கினித்த சித்தி ...... யருள்வோனே

cekattuk koruttar putra niṉaittut tutitta patta jeṉattuk kiṉitta citti ...... yaruḷvōṉē

Report an error

மிசைத்துத் திடத்தொ டுற்று அசைத்துப் பொறுத்த ரக்கன் மிகுத்துப் பெயர்த்தெ டுத்த ...... கயிலாய

micaittut tiṭatto ṭuṟṟu acaittup poṟutta rakkaṉ mikuttup peyartte ṭutta ...... kayilāya

Report an error

மிசைக்குற் றடுத்து மற்ற பொருப்பைப் பொடித்தி டித்து மிதித்துத் துகைத்து விட்ட ...... பெருமாளே.

micaikkuṟ ṟaṭuttu maṟṟa poruppaip poṭitti ṭittu mitittut tukaittu viṭṭa ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).