வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்கு வில்லிக்க தாக்க ...... ருதும்வேளால்
vellikku vīkku mullaikkai vīkku villikka tākka ...... rutumvēḷāl
பாடல் 535 · பாடல் 535
pāṭal 535
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்கு வில்லிக்க தாக்க ...... ருதும்வேளால்
vellikku vīkku mullaikkai vīkku villikka tākka ...... rutumvēḷāl
வில்லற் றவாக்கொள் சொல்லற்று காப்பொய் யில்லத் துறாக்க ...... வலைமேவு
villaṟ ṟavākkoḷ collaṟṟu kāppoy yillat tuṟākka ...... valaimēvu
பல்லத்தி வாய்க்க அல்லற்ப டாக்கை நல்லிற் பொறாச்ச ...... மயமாறின்
pallatti vāykka allaṟpa ṭākkai nalliṟ poṟācca ...... mayamāṟiṉ
பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர் கல்விக் கலாத்த ...... லையலாமோ
pallatta mārkka vallarkkar mūrkkar kalvik kalātta ...... laiyalāmō
அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து சொல்குக்கு டார்த்த ...... இளையோனே
allaikkol vārttai collikki tōttu colkukku ṭārtta ...... iḷaiyōṉē
அல்லுக்கு மாற்றி னெல்லுக்க மேற்புல் கெல்லைப்ப டாக்க ...... ருணைவேளே
allukku māṟṟi ṉellukka mēṟpul kellaippa ṭākka ...... ruṇaivēḷē
வல்லைக்கு மேற்றர் தில்லைக்கு மேற்றர் வல்லிக்கு மேற்ற ...... ரருள்வோனே
vallaikku mēṟṟar tillaikku mēṟṟar vallikku mēṟṟa ...... raruḷvōṉē
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.
vaḷḷikku ḻāttu vaḷḷikkal kātta vaḷḷikku vāytta ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).