கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ விடமிஞ்சு பாதக வேலோ சேலோ குழைகொண்டு லாவிய மீனோ மானோ ...... எனுமானார்
kolaikoṇṭa pōrviḻi kōlō vāḷō viṭamiñcu pātaka vēlō cēlō kuḻaikoṇṭu lāviya mīṉō māṉō ...... eṉumāṉār
பாடல் 546 · பாடல் 546
pāṭal 546
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ விடமிஞ்சு பாதக வேலோ சேலோ குழைகொண்டு லாவிய மீனோ மானோ ...... எனுமானார்
kolaikoṇṭa pōrviḻi kōlō vāḷō viṭamiñcu pātaka vēlō cēlō kuḻaikoṇṭu lāviya mīṉō māṉō ...... eṉumāṉār
குயில்தங்கு மாமொழி யாலே நேரே யிழைதங்கு நூலிடை யாலே மீதூர் குளிர்கொங்கை மேருவி னாலே நானா ...... விதமாகி
kuyiltaṅku māmoḻi yālē nērē yiḻaitaṅku nūliṭai yālē mītūr kuḷirkoṅkai mēruvi ṉālē nāṉā ...... vitamāki
உலைகொண்ட மாமெழு காயே மோகா யலையம்பு ராசியி னூடே மூழ்கா வுடல்பஞ்ச பாதக மாயா நோயா ...... லழிவேனோ
ulaikoṇṭa māmeḻu kāyē mōkā yalaiyampu rāciyi ṉūṭē mūḻkā vuṭalpañca pātaka māyā nōyā ...... laḻivēṉō
உறுதண்ட பாசமொ டாரா வாரா எனையண்டி யேநம னார்தூ தானோர் உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ...... ளருள்வாயே
uṟutaṇṭa pācamo ṭārā vārā eṉaiyaṇṭi yēnama ṉārtū tāṉōr uyirkoṇṭu pōyviṭu nāḷnī mītā ...... ḷaruḷvāyē
அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ எனநின்று வாய்விட வேநீள் மாசூ ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா ...... யிடவேதான்
alaikoṇṭa vāriti kōkō kōkō eṉaniṉṟu vāyviṭa vēnīḷ mācū raṇiyañca rācaṉam vēṟāy nīṟā ...... yiṭavētāṉ
அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ ரனலங்கை வேல்விடும் வீரா தீரா அருமந்த ரூபக ஏகா வேறோர் ...... வடிவாகி
avirkiṉṟa cōtiya vārār nīḷcī raṉalaṅkai vēlviṭum vīrā tīrā arumanta rūpaka ēkā vēṟōr ...... vaṭivāki
மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய் குறமங்கை யாளுட னேமா லாயே மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் ...... குமரேசா
malaikoṇṭa vēṭuvar kāṉū ṭēpōy kuṟamaṅkai yāḷuṭa ṉēmā lāyē mayalkoṇṭu lāyavaḷ tāḷmī tēvīḻ ...... kumarēcā
மதிமிஞ்சு போதக வேலா ஆளா மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் ...... பெருமாளே.
matimiñcu pōtaka vēlā āḷā makiḻcampu vētoḻu pātā nātā mayilantaṇ māmalai vāḻvē vāṉōr ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).