குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல் கடுவ தாமெனு மைக்கண் மடந்தையர் குமுத வாயமு தத்தை நுகர்ந்திசை ...... பொருகாடை
kuvaḷai pūcalvi ḷaittiṭu maṅkayal kaṭuva tāmeṉu maikkaṇ maṭantaiyar kumuta vāyamu tattai nukarnticai ...... porukāṭai
பாடல் 555 · பாடல் 555
pāṭal 555
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல் கடுவ தாமெனு மைக்கண் மடந்தையர் குமுத வாயமு தத்தை நுகர்ந்திசை ...... பொருகாடை
kuvaḷai pūcalvi ḷaittiṭu maṅkayal kaṭuva tāmeṉu maikkaṇ maṭantaiyar kumuta vāyamu tattai nukarnticai ...... porukāṭai
குயில்பு றாமயில் குக்கில் சுரும்பினம் வனப தாயுத மொக்கு மெனும்படி குரல்வி டாஇரு பொற்குட மும்புள ...... கிதமாகப்
kuyilpu ṟāmayil kukkil curumpiṉam vaṉapa tāyuta mokku meṉumpaṭi kuralvi ṭāiru poṟkuṭa mumpuḷa ...... kitamākap
பவள ரேகைப டைத்தத ரங்குறி யுறவி யாளப டத்தை யணைந்துகை பரிச தாடன மெய்க்கர ணங்களின் ...... மதனூலின்
pavaḷa rēkaipa ṭaittata raṅkuṟi yuṟavi yāḷapa ṭattai yaṇaintukai parica tāṭaṉa meykkara ṇaṅkaḷiṉ ...... mataṉūliṉ
படியி லேசெய்து ருக்கிமு யங்கியெ அவச மாய்வட பத்ர நெடுஞ்சுழி படியு மோகச முத்ரம ழுந்துத ...... லொழிவேனோ
paṭiyi lēceytu rukkimu yaṅkiye avaca māyvaṭa patra neṭuñcuḻi paṭiyu mōkaca mutrama ḻuntuta ...... loḻivēṉō
தவள ரூபச ரச்சுதி யிந்திரை ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர் சமுக சேவித துர்க்கை பயங்கரி ...... புவநேசை
tavaḷa rūpaca raccuti yintirai ratipu lōmacai kruttikai rampaiyar camuka cēvita turkkai payaṅkari ...... puvanēcai
சகல காரணி சத்தி பரம்பரி யிமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி சமய நாயகி நிஷ்களி குண்டலி ...... யெமதாயி
cakala kāraṇi catti parampari yimaya pārvati rutri nirañcaṉi camaya nāyaki niṣkaḷi kuṇṭali ...... yematāyi
சிவைம நோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் ...... முருகோனே
civaima nōmaṇi ciṟcuka cuntari kavuri vētavi takṣaṇi yampikai tripurai yāmaḷai yaṟpoṭu tantaruḷ ...... murukōṉē
சிகர கோபுர சித்திர மண்டப மகர தோரண ரத்ந அலங்க்ருத திரிசி ராமலை அப்பர் வணங்கிய ...... பெருமாளே.
cikara kōpura cittira maṇṭapa makara tōraṇa ratna alaṅkruta tirici rāmalai appar vaṇaṅkiya ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).