Skip to content

பாடல் 559 · பாடல் 559

Song 559

pāṭal 559

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள் பரிவு போற்புணர் க்ரீடா பீடிகள் புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் ...... கொங்கைமேலே

poruḷiṉ mēṟpriya kāmā kārikaḷ parivu pōṟpuṇar krīṭā pīṭikaḷ puruṣar kōṭṭiyil nāṇā mōṭikaḷ ...... koṅkaimēlē

Report an error

புடைவை போட்டிடு மாயா ரூபிகள் மிடிய ராக்குபொ லர்மு தேவிகள் புலையர் மாட்டும றாதே கூடிகள் ...... நெஞ்சமாயம்

puṭaivai pōṭṭiṭu māyā rūpikaḷ miṭiya rākkupo larmu tēvikaḷ pulaiyar māṭṭuma ṟātē kūṭikaḷ ...... neñcamāyam

Report an error

கருதொ ணாப்பல கோடா கோடிகள் விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள் கலவி சாத்திர நூலே யோதிகள் ...... தங்களாசைக்

karuto ṇāppala kōṭā kōṭikaḷ viraki ṉāṟpalar mēlvīḻ vīṇikaḷ kalavi cāttira nūlē yōtikaḷ ...... taṅkaḷācaik

Report an error

கவிகள் கூப்பிடு மோயா மாரிகள் அவச மாக்கிடு பேய்நீ ரூணிகள் கருணை நோக்கமி லாமா பாவிக ...... ளின்பமாமோ

kavikaḷ kūppiṭu mōyā mārikaḷ avaca mākkiṭu pēynī rūṇikaḷ karuṇai nōkkami lāmā pāvika ...... ḷiṉpamāmō

Report an error

குருக டாக்ஷக லாவே தாகம பரம வாக்கிய ஞானா சாரிய குறைவு தீர்த்தருள் ஸ்வாமி கார்முக ...... வன்பரான

kuruka ṭākṣaka lāvē tākama parama vākkiya ñāṉā cāriya kuṟaivu tīrttaruḷ svāmi kārmuka ...... vaṉparāṉa

Report an error

கொடிய வேட்டுவர் கோகோ கோவென மடிய நீட்டிய கூர்வே லாயுத குருகி க்ஷேத்ரபு ரேசா வாசுகி ...... அஞ்சமாறும்

koṭiya vēṭṭuvar kōkō kōveṉa maṭiya nīṭṭiya kūrvē lāyuta kuruki kṣētrapu rēcā vācuki ...... añcamāṟum

Report an error

செருப ராக்ரம கேகே வாகன சரவ ணோற்பவ மாலா லாளித திரள்பு யாத்திரி யீரா றாகிய ...... கந்தவேளே

cerupa rākrama kēkē vākaṉa carava ṇōṟpava mālā lāḷita tiraḷpu yāttiri yīrā ṟākiya ...... kantavēḷē

Report an error

சிகர தீர்க்கம காசீ கோபுர முகச டாக்கர சேணா டாக்ருத திரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே.

cikara tīrkkama kācī kōpura mukaca ṭākkara cēṇā ṭākruta tirici rāppaḷi vāḻvē tēvarkaḷ ...... tampirāṉē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).