Skip to content

பாடல் 580 · பாடல் 580

Song 580

pāṭal 580

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

மாயா செர்ருப முழுச்ச மத்திகள் ஓயா வுபாய மனப்ப சப்பிகள் வாணாளை யீரும் விழிக்க டைச்சிகள் ...... முநிவோரும்

māyā cerrupa muḻucca mattikaḷ ōyā vupāya maṉappa cappikaḷ vāṇāḷai yīrum viḻikka ṭaiccikaḷ ...... munivōrum

Report an error

மாலாகி வாட நகைத்து ருக்கிகள் ஏகாச மீது தனத்தி றப்பிகள் வாரீ ரிரீரென் முழுப்பு ரட்டிகள் ...... வெகுமோகம்

mālāki vāṭa nakaittu rukkikaḷ ēkāca mītu taṉatti ṟappikaḷ vārī rirīreṉ muḻuppu raṭṭikaḷ ...... vekumōkam

Report an error

ஆயாத வாசை யெழுப்பு மெத்திகள் ஈயாத போதி லறப்பி ணக்கிகள் ஆவேச நீருண் மதப்பொ றிச்சிகள் ...... பழிபாவம்

āyāta vācai yeḻuppu mettikaḷ īyāta pōti laṟappi ṇakkikaḷ āvēca nīruṇ matappo ṟiccikaḷ ...... paḻipāvam

Report an error

ஆமா றெணாத திருட்டு மட்டைகள் கோமாள மான குறிக்க ழுத்திகள் ஆசார வீன விலைத்த னத்திய ...... ருறவாமோ

āmā ṟeṇāta tiruṭṭu maṭṭaikaḷ kōmāḷa māṉa kuṟikka ḻuttikaḷ ācāra vīṉa vilaitta ṉattiya ...... ruṟavāmō

Report an error

காயாத பால்நெய் தயிர்க்கு டத்தினை ஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள் காணாத வாறு குடிக்கு மப்பொழு ...... துரலோடே

kāyāta pālney tayirkku ṭattiṉai ēyā veṇāma leṭutti ṭaiccikaḷ kāṇāta vāṟu kuṭikku mappoḻu ...... turalōṭē

Report an error

கார்போலு மேனி தனைப்பி ணித்தொரு போர்போ லசோதை பிடித்த டித்திட காதோடு காது கையிற்பி டித்தழு ...... தினிதூதும்

kārpōlu mēṉi taṉaippi ṇittoru pōrpō lacōtai piṭitta ṭittiṭa kātōṭu kātu kaiyiṟpi ṭittaḻu ...... tiṉitūtum

Report an error

வேயா லநேக விதப்ப சுத்திரள் சாயாமல் மீள அழைக்கு மச்சுதன் வீறான மாம னெனப்ப டைத்தருள் ...... வயலூரா

vēyā lanēka vitappa cuttiraḷ cāyāmal mīḷa aḻaikku maccutaṉ vīṟāṉa māma ṉeṉappa ṭaittaruḷ ...... vayalūrā

Report an error

வீணாள் கொடாத படைச்செ ருக்கினில் சூர்மாள வேலை விடுக்கும் அற்புத வேலா விராலி மலைத்த லத்துறை ...... பெருமாளே.

vīṇāḷ koṭāta paṭaicce rukkiṉil cūrmāḷa vēlai viṭukkum aṟputa vēlā virāli malaitta lattuṟai ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).