தகரநறை பூண்ட விந்தைக் குழலியர்கள் தேய்ந்த இன்பத் தளருமிடை யேந்து தங்கத் ...... தனமானார்
takaranaṟai pūṇṭa vintaik kuḻaliyarkaḷ tēynta iṉpat taḷarumiṭai yēntu taṅkat ...... taṉamāṉār
பாடல் 60 · பாடல் 60
pāṭal 60
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
தகரநறை பூண்ட விந்தைக் குழலியர்கள் தேய்ந்த இன்பத் தளருமிடை யேந்து தங்கத் ...... தனமானார்
takaranaṟai pūṇṭa vintaik kuḻaliyarkaḷ tēynta iṉpat taḷarumiṭai yēntu taṅkat ...... taṉamāṉār
தமைமனதில் வாஞ்சை பொங்கக் கலவியொடு சேர்ந்து மந்த்ரச் சமயஜெப நீங்கி யிந்தப் ...... படிநாளும்
tamaimaṉatil vāñcai poṅkak kalaviyoṭu cērntu mantrac camayajepa nīṅki yintap ...... paṭināḷum
புகலரிய தாந்த்ரி சங்கத் தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப் புவியதனில் வாழ்ந்து வஞ்சித் ...... துழல்மூடர்
pukalariya tāntri caṅkat tamiḻpaṉuva lāyntu koñcip puviyataṉil vāḻntu vañcit ...... tuḻalmūṭar
புநிதமிலி மாந்தர் தங்கட் புகழ்பகர்தல் நீங்கி நின்பொற் புளகமலர் பூண்டு வந்தித் ...... திடுவேனோ
punitamili māntar taṅkaṭ pukaḻpakartal nīṅki niṉpoṟ puḷakamalar pūṇṭu vantit ...... tiṭuvēṉō
தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்த மிந்தித் தகுகணக தாங்க ணங்கத் ...... தனதான
takuṭataku tānta tantat tikuṭatiku tīnta mintit takukaṇaka tāṅka ṇaṅkat ...... taṉatāṉa
தனனதன தாந்த னந்தத் தெனநடன மார்ந்த துங்கத் தனிமயிலை யூர்ந்த சந்தத் ...... திருமார்பா
taṉaṉataṉa tānta ṉantat teṉanaṭaṉa mārnta tuṅkat taṉimayilai yūrnta cantat ...... tirumārpā
திசையசுரர் மாண்ட ழுந்தத் திறலயிலை வாங்கு செங்கைச் சிமையவரை யீன்ற மங்கைக் ...... கொருபாலா
ticaiyacurar māṇṭa ḻuntat tiṟalayilai vāṅku ceṅkaic cimaiyavarai yīṉṟa maṅkaik ...... korupālā
திகழ்வயிர மேந்து கொங்கைக் குறவனிதை காந்த சந்த்ரச் சிகரமுகி லோங்கு செந்திற் ...... பெருமாளே.
tikaḻvayira mēntu koṅkaik kuṟavaṉitai kānta cantrac cikaramuki lōṅku centiṟ ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).