பொற்சித்ரப் பச்சைப் பட்டுக் கச்சிட்டுக் கட்டிப் பத்மப் புட்பத்துக் கொப்பக் கற்பித் ...... திளைஞோர்கள்
poṟcitrap paccaip paṭṭuk kacciṭṭuk kaṭṭip patmap puṭpattuk koppak kaṟpit ...... tiḷaiñōrkaḷ
பாடல் 604 · பாடல் 604
pāṭal 604
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
பொற்சித்ரப் பச்சைப் பட்டுக் கச்சிட்டுக் கட்டிப் பத்மப் புட்பத்துக் கொப்பக் கற்பித் ...... திளைஞோர்கள்
poṟcitrap paccaip paṭṭuk kacciṭṭuk kaṭṭip patmap puṭpattuk koppak kaṟpit ...... tiḷaiñōrkaḷ
புட்பட்டுச் செப்பத் துப்பற் கொத்தப்பொற் றித்தத் திட்பப் பொற்பிற்பெற் றுக்ரச் சக்ரத் ...... தனமானார்
puṭpaṭṭuc ceppat tuppaṟ kottappoṟ ṟittat tiṭpap poṟpiṟpeṟ ṟukrac cakrat ...... taṉamāṉār
கற்சித்தச் சுத்தப் பொய்ப்பித் தத்திற்புக் கிட்டப் பட்டுக் கைக்குத்திட் டிட்டுச் சுற்றித் ...... திரியாமல்
kaṟcittac cuttap poyppit tattiṟpuk kiṭṭap paṭṭuk kaikkuttiṭ ṭiṭṭuc cuṟṟit ...... tiriyāmal
கற்றுற்றுச் சித்திக் கைக்குச் சித்திப்பப் பக்ஷத் திற்சொற் கற்பித்தொப் பித்துக் கொற்றக் ...... கழல்தாராய்
kaṟṟuṟṟuc cittik kaikkuc cittippap pakṣat tiṟcoṟ kaṟpittop pittuk koṟṟak ...... kaḻaltārāy
குற்சித்துக் கொட்டுக் கொட்டுத் துக்கச்சத் துக்குக் குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக் ...... கெனமாறா
kuṟcittuk koṭṭuk koṭṭut tukkaccat tukkuk kukkuk kukkukkuk kukkuk kukkuk ...... keṉamāṟā
குட்சிக்குப் பக்ஷிக் கைக்குக் கக்ஷத்திற் பட்சத் தத்தக் கொட்டிச்சுட் டிக்கொக் ரிக்குக் ...... குடதாரி
kuṭcikkup pakṣik kaikkuk kakṣattiṟ paṭcat tattak koṭṭiccuṭ ṭikkok rikkuk ...... kuṭatāri
சற்சித்துத் தொற்புத் திப்பட் சத்தர்க்கொப் பித்தட் சத்துச் சத்தத்தைச் சத்திக் கொச்சைப் ...... பதிவாழ்வே
caṟcittut toṟput tippaṭ cattarkkop pittaṭ cattuc cattattaic cattik koccaip ...... pativāḻvē
தக்ஷப்பற் றுக்கெர்ப் பத்திற் செற்பற்றைச் செற்றிட் டுச்சச் சற்பப்பொற் றைக்குட் சொக்கப் ...... பெருமாளே.
takṣappaṟ ṟukkerp pattiṟ ceṟpaṟṟaic ceṟṟiṭ ṭuccac caṟpappoṟ ṟaikkuṭ cokkap ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).