விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ ...... மயலூறி
vilaikku mēṉiyi laṇikkōvai mēkalai taritta vāṭaiyu maṇippūṇu mākave miṉukku mātarka ḷiṭakkāma mūḻkiye ...... mayalūṟi
பாடல் 650 · பாடல் 650
pāṭal 650
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ ...... மயலூறி
vilaikku mēṉiyi laṇikkōvai mēkalai taritta vāṭaiyu maṇippūṇu mākave miṉukku mātarka ḷiṭakkāma mūḻkiye ...... mayalūṟi
மிகுத்த காமிய னெனப்பாரு ளொரெதிர் நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு ...... கொடியேனைக்
mikutta kāmiya ṉeṉappāru ḷoretir nakaikka vēyuṭa leṭuttēvi yākula veṟuppa tākiye yuḻaittēvi ṭāypaṭu ...... koṭiyēṉaik
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு ...... மொருவாழ்வே
kalakka mākave malakkūṭi lēmiku piṇikku ḷākiye tavikkāma lēyuṉai kavikku ḷāycoli kaṭaittēṟa vēceyu ...... moruvāḻvē
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுகு ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் ...... தரவேணும்
katikku nātaṉi yuṉaittēṭi yēpuku ḻuraikku nāyeṉai yaruṭpārvai yākave kaḻaṟku ḷākave ciṟappāṉa tāyaruḷ ...... taravēṇum
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் ...... தருவேளே
malaikku nāyaka civakkāmi nāyakar tirukku māraṉe mukattāṟu tēcika vaṭippa mātoru kuṟappāvai yāḷmakiḻ ...... taruvēḷē
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும் வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு ...... முருகோனே
vaciṭṭar kācipar tavattāṉa yōkiyar akatya māmuni yiṭaikkāṭar kīraṉum vakutta pāviṉil poruṭkōla māyvaru ...... murukōṉē
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் ...... வருவோனே
nilaikku nāṉmaṟai makattāṉa pūcurar tirukko ṇāmalai talattāru kōpura nilaikkuḷ vāyiṉil kiḷippāṭu pūtiyil ...... varuvōṉē
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி நினைத்த காரிய மநுக்கூல மேபுரி ...... பெருமாளே.
nikaḻttu mēḻpava kaṭaṟcūṟai yākave yeṭutta vēlkoṭu poṭittūḷa tāeṟi niṉaitta kāriya manukkūla mēpuri ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).