நசையொடு தோலுந் தசைதுறு நீரும் நடுநடு வேயென் ...... புறுகீலும்
nacaiyoṭu tōlun tacaituṟu nīrum naṭunaṭu vēyeṉ ...... puṟukīlum
பாடல் 665 · பாடல் 665
pāṭal 665
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
நசையொடு தோலுந் தசைதுறு நீரும் நடுநடு வேயென் ...... புறுகீலும்
nacaiyoṭu tōlun tacaituṟu nīrum naṭunaṭu vēyeṉ ...... puṟukīlum
நலமுறு வேயொன் றிடஇரு கால்நன் றுறநடை யாருங் ...... குடிலூடே
nalamuṟu vēyoṉ ṟiṭairu kālnaṉ ṟuṟanaṭai yāruṅ ...... kuṭilūṭē
விசையுறு காலம் புலனெறி யேவெங் கனலுயிர் வேழந் ...... திரியாதே
vicaiyuṟu kālam pulaṉeṟi yēveṅ kaṉaluyir vēḻan ...... tiriyātē
விழுமடி யார்முன் பழுதற வேள்கந் தனுமென வோதும் ...... விறல்தாராய்
viḻumaṭi yārmuṉ paḻutaṟa vēḷkan taṉumeṉa vōtum ...... viṟaltārāy
இசையுற வேயன் றசைவற வூதும் எழிலரி வேழம் ...... எனையாளென்
icaiyuṟa vēyaṉ ṟacaivaṟa vūtum eḻilari vēḻam ...... eṉaiyāḷeṉ
றிடர்கொடு மூலந் தொடர்வுட னோதும் இடமிமை யாமுன் ...... வருமாயன்
ṟiṭarkoṭu mūlan toṭarvuṭa ṉōtum iṭamimai yāmuṉ ...... varumāyaṉ
திசைமுக னாருந் திசைபுவி வானுந் திரிதர வாழுஞ் ...... சிவன்மூதூர்
ticaimuka ṉārun ticaipuvi vāṉun tiritara vāḻuñ ...... civaṉmūtūr
தெரிவையர் தாம்வந் தருநட மாடுந் திருவல மேவும் ...... பெருமாளே.
terivaiyar tāmvan tarunaṭa māṭun tiruvala mēvum ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).