Skip to content

பாடல் 677 · பாடல் 677

Song 677

pāṭal 677

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந் தணியாச் சாகர மேழுங் ...... கிரியேழுஞ்

tavarvāṭ ṭōmara cūlan tariyāk kātiya cūrun taṇiyāc cākara mēḻuṅ ...... kiriyēḻuñ

Report an error

சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந் தரிகூத் தாடிய மாவுந் ...... தினைகாவல்

carukāk kāykatir vēlum porukāṟ cēvalu nīlan tarikūt tāṭiya māvun ...... tiṉaikāval

Report an error

துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந் துணையாத் தாழ்வற வாழும் ...... பெரியோனே

tuvarvāyk kāṉavar māṉuñ curanāṭ ṭāḷoru tēṉun tuṇaiyāt tāḻvaṟa vāḻum ...... periyōṉē

Report an error

துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந் தொலையாப் பாடலை யானும் ...... புகல்வேனோ

tuṇaiyāyk kāvalcey vāyeṉ ṟuṇarāp pāvikaḷ pālun tolaiyāp pāṭalai yāṉum ...... pukalvēṉō

Report an error

பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும் பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படிவேதம்

pavamāyt tāṇatu vākum paṉaikāyt tēmaṇa nāṟum paḻamāyp pārmicai vīḻum ...... paṭivētam

Report an error

படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம் பறிகோப் பாளிகள் யாருங் ...... கழுவேறச்

paṭiyāp pātakar pāyaṉ ṟiyuṭāp pētaikaḷ kēcam paṟikōp pāḷikaḷ yāruṅ ...... kaḻuvēṟac

Report an error

சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக் காலொளி சேர்வெண் டிருநீற் றாலம ராடுஞ் ...... சிறியோனே

civamāyt tēṉamutūṟun tiruvāk kāloḷi cērveṇ ṭirunīṟ ṟālama rāṭuñ ...... ciṟiyōṉē

Report an error

செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந் திருவோத் தூர்தனில் மேவும் ...... பெருமாளே.

ceḻunīrc cēynati yāraṅ koḻiyāk kōmaḷam vīcun tiruvōt tūrtaṉil mēvum ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).