Skip to content

பாடல் 680 · பாடல் 680

Song 680

pāṭal 680

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல மாளம்போர் செயுமாய ...... விழியாலே

ālampō leḻunīla mēlaṅkāy varikōla māḷampōr ceyumāya ...... viḻiyālē

Report an error

ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார ஆடம்பார் குவிநேய ...... முலையாலே

ārampāl toṭaicāla āluṅkō puravāra āṭampār kuvinēya ...... mulaiyālē

Report an error

சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய வேளங்கார் துடிநீப ...... இடையாலே

cālantāḻ vuṟumāla ēlaṅkōr piṭiyāya vēḷaṅkār tuṭinīpa ...... iṭaiyālē

Report an error

சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு காலந்தா னொழிவேது ...... உ ரையாயோ

cārañcār vilaṉāya nēkaṅkā yamaṉmīṟu kālantā ṉoḻivētu ...... u raiyāyō

Report an error

பாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாத மாதம்பா தருசேய ...... வயலூரா

pālampāl maṇanāṟu kālaṅkē yiṟilāta mātampā tarucēya ...... vayalūrā

Report an error

பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர பாசந்தா திருமாலின் ...... மருகோனே

pāṭampār tiricūla nīṭantā karavīra pācantā tirumāliṉ ...... marukōṉē

Report an error

வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும் வீறங்கே யிருபாலு ...... முறவீறு

vēlampār kuṟamātu mēlumpār tarumātum vīṟaṅkē yirupālu ...... muṟavīṟu

Report an error

வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு வேலங்கா டுறைசீல ...... பெருமாளே.

vētantā vapirāma nātantā varuḷpāvu vēlaṅkā ṭuṟaicīla ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).