Skip to content

பாடல் 737 · பாடல் 737

Song 737

pāṭal 737

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப் பவளநிறத் ததரம்விளைத் ...... தமுதூறல்

paravuvarik kayalkuviyak kuyilkiḷiyot turaipataṟap pavaḷaniṟat tataramviḷait ...... tamutūṟal

Report an error

பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப் படைமதனக் கலையடவிப் ...... பொதுமாதர்

parukiniṟat taraḷamaṇik kaḷapamulaik kuvaṭacaiyap paṭaimataṉak kalaiyaṭavip ...... potumātar

Report an error

சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத் துகிலகலக் க்ருபைவிளைவித் ...... துருகாமுன்

corukumalark kuḻalcariyat taḷarvuṟuciṟ ṟiṭaituvaḷat tukilakalak krupaiviḷaivit ...... turukāmuṉ

Report an error

சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற் சுழலுமனக் கவலையொழித் ...... தருள்வாயே

corimalarmaṭ ṭalaraṇaipuk kitamaturak kalavitaṉiṟ cuḻalumaṉak kavalaiyoḻit ...... taruḷvāyē

Report an error

கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக் கணைதொடுமச் சுதன்மருகக் ...... குமரேசா

karukuniṟat tacuraṉmuṭit talaiyorupat taṟamuṭukik kaṇaitoṭumac cutaṉmarukak ...... kumarēcā

Report an error

கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக் கவிநிறையப் பெறும்வரிசைப் ...... புலவோனே

kayilaimalaik kiḻavaṉiṭak kumarivirup poṭukarutak kaviniṟaiyap peṟumvaricaip ...... pulavōṉē

Report an error

திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச் செறியும்வயற் கதிரலையத் ...... திரைமோதித்

tiraḷkamukiṟ ṟalaiyiṭaṟip palakatalik kulaicitaṟic ceṟiyumvayaṟ katiralaiyat ...... tiraimōtit

Report an error

திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித் திருவதிகைப் பதிமுருகப் ...... பெருமாளே.

timitimeṉap paṟaiyaṟaiyap perukupuṉaṟ keṭilanatit tiruvatikaip patimurukap ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).