ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில் யாழ்வைத்திசை கூரக்குழ ...... லுடைசோர
ārattaṉa pārattukil mūṭippalar kāṇakkaiyil yāḻvaitticai kūrakkuḻa ...... luṭaicōra
பாடல் 741 · பாடல் 741
pāṭal 741
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில் யாழ்வைத்திசை கூரக்குழ ...... லுடைசோர
ārattaṉa pārattukil mūṭippalar kāṇakkaiyil yāḻvaitticai kūrakkuḻa ...... luṭaicōra
ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரை யாசப்படு வார்பொட்டணி ...... சசிநேர்வாள்
ākappaṉi nīrappuḻu kōṭakkuḻai yāṭappirai yācappaṭu vārpoṭṭaṇi ...... cacinērvāḷ
கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை கோவைக்கனி வாய்பற்கதி ...... ரொளிசேருங்
kūrakkaṇai vēlkaṭkayal pōlaccuḻal vārcarkkarai kōvaikkaṉi vāypaṟkati ...... roḷicēruṅ
கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திர கோபச்செய லார்பித்தர்க ...... ளுறவாமோ
kōlakkuyi lārpaṭṭuṭai nūlottiṭai yārcittira kōpacceya lārpittarka ...... ḷuṟavāmō
பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள் பூசைக்கியல் வாள்பத்தினி ...... சிவகாமி
pūrittaṉa pāraccaṭai vētakkuḻa lāḷpattarkaḷ pūcaikkiyal vāḷpattiṉi ...... civakāmi
பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர் போகர்க்குப தேசித்தருள் ...... குருநாதா
pūmikkaṭal mūvarkkumu ṉāḷpattira kāḷippuṇar pōkarkkupa tēcittaruḷ ...... kurunātā
சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட சோர்விற்கதிர் வேல்விட்டருள் ...... விறல்வீரா
cūrakkuva ṭāḻittavi ṭāymuṭṭacu rārukkiṭa cōrviṟkatir vēlviṭṭaruḷ ...... viṟalvīrā
தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு சோதித்துறை யூர்நத்திய ...... பெருமாளே.
tōkaicceya lāḷpoṟpira kācakkuṟa māṉmuttoṭu cōtittuṟai yūrnattiya ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).