சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி தலையரு நின்று கலங்க விரும்பிய ...... தமிழ்கூறுஞ்
caruvi yikaḻntu maruṇṭu vekuṇṭuṟu camayamu moṉṟilai yeṉṟa varumpaṟi talaiyaru niṉṟu kalaṅka virumpiya ...... tamiḻkūṟuñ
பாடல் 771 · பாடல் 771
pāṭal 771
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி தலையரு நின்று கலங்க விரும்பிய ...... தமிழ்கூறுஞ்
caruvi yikaḻntu maruṇṭu vekuṇṭuṟu camayamu moṉṟilai yeṉṟa varumpaṟi talaiyaru niṉṟu kalaṅka virumpiya ...... tamiḻkūṟuñ
சலிகையு நன்றியும் வென்றியு மங்கள பெருமைக ளுங்கன முங்குண மும்பயில் சரவண மும்பொறை யும்புக ழுந்திகழ் ...... தனிவேலும்
calikaiyu naṉṟiyum veṉṟiyu maṅkaḷa perumaika ḷuṅkaṉa muṅkuṇa mumpayil caravaṇa mumpoṟai yumpuka ḻuntikaḻ ...... taṉivēlum
விருது துலங்க சிகண்டியி லண்டரு முருகி வணங்க வரும்பத மும்பல விதரண முந்திற முந்தர முந்தினை ...... புனமானின்
virutu tulaṅka cikaṇṭiyi laṇṭaru muruki vaṇaṅka varumpata mumpala vitaraṇa muntiṟa muntara muntiṉai ...... puṉamāṉiṉ
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி வருடிம ணந்துபு ணர்ந்தது வும்பல விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல் ...... மறவேனே
mrukamata kuṅkuma koṅkaiyil nontaṭi varuṭima ṇantupu ṇarntatu vumpala vijayamu maṉpiṉmo ḻintumo ḻintiyal ...... maṟavēṉē
கருதியி லங்கை யழிந்துவி டும்படி அவுணர டங்கம டிந்துவி ழும்படி கதிரவ னிந்து விளங்கி வரும்படி ...... விடுமாயன்
karutiyi laṅkai yaḻintuvi ṭumpaṭi avuṇara ṭaṅkama ṭintuvi ḻumpaṭi katirava ṉintu viḷaṅki varumpaṭi ...... viṭumāyaṉ
கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்துத வும்புய லிந்திரை கணவன ரங்க முகுந்தன் வருஞ்சக ...... டறமோதி
kaṭakari yañci naṭuṅki varuntiṭu maṭuviṉil vantuta vumpuya lintirai kaṇavaṉa raṅka mukuntaṉ varuñcaka ...... ṭaṟamōti
மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன லங்கல் புனைந்தரு ளுங்குறள் வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகை ...... தொடுமீளி
marutu kuluṅki nalaṅka muṉintiṭu varataṉa laṅkal puṉaintaru ḷuṅkuṟaḷ vaṭivaṉe ṭuṅkaṭal maṅkavo rampukai ...... toṭumīḷi
மருகபு ரந்தர னுந்தவ மொன்றிய பிரமபு ரந்தனி லுங்குக னென்பவர் மனதினி லும்பரி வொன்றிய மர்ந்தருள் ...... பெருமாளே.
marukapu rantara ṉuntava moṉṟiya piramapu rantaṉi luṅkuka ṉeṉpavar maṉatiṉi lumpari voṉṟiya marntaruḷ ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).