Skip to content

பாடல் 774 · பாடல் 774

Song 774

pāṭal 774

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால தினகர னேய்ந்த மாளி ...... கையிலாரஞ்

tiṉamaṇi cārṅka pāṇi yeṉamatiḷ nīṇṭu cāla tiṉakara ṉēynta māḷi ...... kaiyilārañ

Report an error

செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட ...... இருபாலும்

ceḻumaṇi cērnta pīṭi kaiyilicai vāynta pāṭal vayiriyar cērntu pāṭa ...... irupālum

Report an error

இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை புழுககில் சாந்து பூசி ...... யரசாகி

iṉavaḷai pūṇkai yārka variyiṭa vēyntu mālai puḻukakil cāntu pūci ...... yaracāki

Report an error

இனிதிரு மாந்து வாழு மிருவினை நீண்ட காய மொருபிடி சாம்ப லாகி ...... விடலாமோ

iṉitiru māntu vāḻu miruviṉai nīṇṭa kāya morupiṭi cāmpa lāki ...... viṭalāmō

Report an error

வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை மயிலொடு பாங்கி மார்க ...... ளருகாக

vaṉacara rēṅka vāṉa mukaṭuṟa vōṅki ācai mayiloṭu pāṅki mārka ...... ḷarukāka

Report an error

மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே

mayiloṭu māṉkaḷ cūḻa vaḷavari vēṅkai yāki malaimicai tōṉṟu māya ...... vaṭivōṉē

Report an error

கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு கருணைகொள் பாண்டி நாடு ...... பெறவேதக்

kaṉacamaṇ mūṅkar kōṭi kaḻumicai tūṅka nīṟu karuṇaikoḷ pāṇṭi nāṭu ...... peṟavētak

Report an error

கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய கவுணியர் வேந்த தேவர் ...... பெருமாளே.

kavitaru kānta pāla kaḻumala pūnta rāya kavuṇiyar vēnta tēvar ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).