மேக வார்குழல தாடதன பாரமிசை யார மாடகுழை யாடவிழி யாடபொறி மேனி வாசனைகள் வீச அல்குல் மோதிபரி ...... மளமேற
mēka vārkuḻala tāṭataṉa pāramicai yāra māṭakuḻai yāṭaviḻi yāṭapoṟi mēṉi vācaṉaikaḷ vīca alkul mōtipari ...... maḷamēṟa
பாடல் 784 · பாடல் 784
pāṭal 784
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
மேக வார்குழல தாடதன பாரமிசை யார மாடகுழை யாடவிழி யாடபொறி மேனி வாசனைகள் வீச அல்குல் மோதிபரி ...... மளமேற
mēka vārkuḻala tāṭataṉa pāramicai yāra māṭakuḻai yāṭaviḻi yāṭapoṟi mēṉi vācaṉaikaḷ vīca alkul mōtipari ...... maḷamēṟa
மீனு லாடையிடை யாடமயில் போலநடை யோல மோலமென பாதமணி நூபுரமு மேல்வில் வீசபணி கீரகுயில் போலகுரல் ...... முழவோசை
mīṉu lāṭaiyiṭai yāṭamayil pōlanaṭai yōla mōlameṉa pātamaṇi nūpuramu mēlvil vīcapaṇi kīrakuyil pōlakural ...... muḻavōcai
ஆக வேயவைகள் கூடிடுவர் வீதிவரு வோரை வாருமென வேசரச மோடுருகி ஆசை போலமனை யேகொடணை வார்கள்குவ ...... டதிபார
āka vēyavaikaḷ kūṭiṭuvar vītivaru vōrai vārumeṉa vēcaraca mōṭuruki ācai pōlamaṉai yēkoṭaṇai vārkaḷkuva ...... ṭatipāra
ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடு வேர்வை பாயஅணை யூடமளி யாடியிட ரான சூலைபல நோய்கள்கட லாடியுட ...... லுழல்வேனோ
āṇi māmulaiyiṉ mūḻkicuka vārikoṭu vērvai pāyaaṇai yūṭamaḷi yāṭiyiṭa rāṉa cūlaipala nōykaḷkaṭa lāṭiyuṭa ...... luḻalvēṉō
நாக லோகர்மதி லோகர்பக லோகர்விதி நாடு ளோர்களம ரோர்கள்கண நாதர்விடை நாதர் வேதியர்கள் ஆதிசர சோதிதிகழ் ...... முநிவோர்கள்
nāka lōkarmati lōkarpaka lōkarviti nāṭu ḷōrkaḷama rōrkaḷkaṇa nātarviṭai nātar vētiyarkaḷ āticara cōtitikaḻ ...... munivōrkaḷ
நாத ரேநரர்ம னாரணர்பு ராணவகை வேத கீதவொலி பூரையிது பூரையென நாச மாயசுரர் மேவுகிரி தூளிபட ...... விடும்வேலா
nāta rēnararma ṉāraṇarpu rāṇavakai vēta kītavoli pūraiyitu pūraiyeṉa nāca māyacurar mēvukiri tūḷipaṭa ...... viṭumvēlā
தோகை மாதுகுற மாதமுத மாதுவினல் தோழி மாதுவளி நாயகிமி னாளைசுக சோக மோடிறுகி மார்முலைவி டாமலணை ...... புணர்வோனே
tōkai mātukuṟa mātamuta mātuviṉal tōḻi mātuvaḷi nāyakimi ṉāḷaicuka cōka mōṭiṟuki mārmulaivi ṭāmalaṇai ...... puṇarvōṉē
தோளி ராறுமுக மாறுமயில் வேலழகு மீதெய் வானவடி வாதொழுதெ ணாவயனர் சூழு காவிரியும் வேளூர்முரு காவமரர் ...... பெருமாளே.
tōḷi rāṟumuka māṟumayil vēlaḻaku mītey vāṉavaṭi vātoḻute ṇāvayaṉar cūḻu kāviriyum vēḷūrmuru kāvamarar ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).