அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட் டழைத்தி தப்தடச் ...... சிலகூறி
arukki metteṉac cirittu maikkaṇiṭ ṭaḻaitti taptaṭac ...... cilakūṟi
பாடல் 787 · பாடல் 787
pāṭal 787
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட் டழைத்தி தப்தடச் ...... சிலகூறி
arukki metteṉac cirittu maikkaṇiṭ ṭaḻaitti taptaṭac ...... cilakūṟi
அரைப்ப ணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த் தணைத்தி தழ்க்கொடுத் ...... தநுராகத்
araippa ṇattaiviṟ ṟuṭutta paṭṭaviḻt taṇaitti taḻkkoṭut ...... tanurākat
துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க் குளக்க ருத்தினற் ...... ப்ரமைகூரா
turukki maṭṭaṟap poruṭpa ṟippavark kuḷakka ruttiṉaṟ ...... pramaikūrā
துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித் துனைத்தி ருப்புகழ்ப் ...... பகர்வேனோ
turaittu ceyppatit talatti ṉaittutit tuṉaitti ruppukaḻp ...... pakarvēṉō
தருக்கு மற்கடப் படைப்ப லத்தினிற் றடப்பொ ருப்பெடுத் ...... தணையாகச்
tarukku maṟkaṭap paṭaippa lattiṉiṟ ṟaṭappo ruppeṭut ...... taṇaiyākac
சமுத்திர த்தினைக் குறுக்க டைத்ததிற் றரித்த ரக்கர்பொட் ...... டெழவேபோர்
camuttira ttiṉaik kuṟukka ṭaittatiṟ ṟaritta rakkarpoṭ ...... ṭeḻavēpōr
செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச் செயித்த வுத்தமத் ...... திருமாமன்
cerukku vikramac carattai viṭṭuṟac ceyitta vuttamat ...... tirumāmaṉ
திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த் திருப்ப டிக்கரைப் ...... பெருமாளே.
tirutta kappaṉmec corutta muttamiḻt tiruppa ṭikkaraip ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).