எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை யென்றுந்துயர் பொன்றும்படி ...... யொருநாளே
entaṉcaṭa laṅkampala paṅkampaṭu tontaṅkaḷai yeṉṟuntuyar poṉṟumpaṭi ...... yorunāḷē
பாடல் 801 · பாடல் 801
pāṭal 801
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை யென்றுந்துயர் பொன்றும்படி ...... யொருநாளே
entaṉcaṭa laṅkampala paṅkampaṭu tontaṅkaḷai yeṉṟuntuyar poṉṟumpaṭi ...... yorunāḷē
இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை யென்றும்படி பந்தங்கெட ...... மயிலேறி
iṉpantaru cempoṉkaḻa luntuṅkaḻal tantumpiṉai yeṉṟumpaṭi pantaṅkeṭa ...... mayilēṟi
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை மண்டும்படி நின்றுஞ்சுட ...... ரொளிபோலும்
vantumpira caṇṭampaki raṇṭampuvi yeṅkunticai maṇṭumpaṭi niṉṟuñcuṭa ...... roḷipōlum
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும் வண்டன்தமி யன்றன்பவம் ...... ஒழியாதோ
vañcaṅkuṭi koṇṭuntiri neñcaṉtuka ḷeṉṟuṅkoḷum vaṇṭaṉtami yaṉṟaṉpavam ...... oḻiyātō
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு ...... மணியாரம்
tantantaṉa tintintimi yeṉṟumpala cañcaṅkoṭu tañcampuri koñcuñciṟu ...... maṇiyāram
சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி சம்புந்தொழ நின்றுந்தினம் ...... விளையாடும்
cantantoṉi kaṇṭumpuya laṅkaṉciva ṉampaṉpati campuntoḻa niṉṟuntiṉam ...... viḷaiyāṭum
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி கண்டுய்ந்திட அன்றன்பொடு ...... வருவோனே
kantaṉkuka ṉeṉṟaṉkuru veṉṟuntoḻu maṉpaṉkavi kaṇṭuyntiṭa aṉṟaṉpoṭu ...... varuvōṉē
கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை கந்தன்குடி யின்தங்கிய ...... பெருமாளே.
kaṇṭiṉkaṉi cintuñcuvai poṅkumpuṉal taṅkuñcuṉai kantaṉkuṭi yiṉtaṅkiya ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).