சோதி மந்திரம் போத கம்பரவு ஞான கம்பரந் தேயி ருந்தவெளி தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட ...... முங்கொளாமல்
cōti mantiram pōta kamparavu ñāṉa kamparan tēyi runtaveḷi tōṭa larntapoṉ pūvi runtaiṭa ...... muṅkoḷāmal
பாடல் 805 · பாடல் 805
pāṭal 805
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
சோதி மந்திரம் போத கம்பரவு ஞான கம்பரந் தேயி ருந்தவெளி தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட ...... முங்கொளாமல்
cōti mantiram pōta kamparavu ñāṉa kamparan tēyi runtaveḷi tōṭa larntapoṉ pūvi runtaiṭa ...... muṅkoḷāmal
சூது பந்தயம் பேசி யஞ்சுவகை சாதி விண்பறிந் தோடு கண்டர்மிகு தோத கம்பரிந் தாடு சிந்துபரி ...... கந்துபாயும்
cūtu pantayam pēci yañcuvakai cāti viṇpaṟin tōṭu kaṇṭarmiku tōta kamparin tāṭu cintupari ...... kantupāyum
வீதி மண்டலம் பூண மர்ந்துகழி கோல மண்டிநின் றாடி யின்பவகை வேணு மென்றுகண் சோர ஐம்புலனொ ...... டுங்குபோதில்
vīti maṇṭalam pūṇa marntukaḻi kōla maṇṭiniṉ ṟāṭi yiṉpavakai vēṇu meṉṟukaṇ cōra aimpulaṉo ...... ṭuṅkupōtil
வேதி யன்புரிந் தேடு கண்டளவி லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட வீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇட ...... ரென்றுபோமோ
vēti yaṉpurin tēṭu kaṇṭaḷavi lōṭi veñcuṭuṅ kāṭa ṇaintucuṭa vīḻki ventukun tīṭu mintaiṭa ...... reṉṟupōmō
ஆதி மண்டலஞ் சேர வும்பரம சோம மண்டலங் கூட வும்பதும வாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிப ...... டர்ந்ததோகை
āti maṇṭalañ cēra vumparama cōma maṇṭalaṅ kūṭa vumpatuma vāḷaṉ maṇṭalañ cāra vuñcuḻipa ...... ṭarntatōkai
ஆழி மண்டலந் தாவி யண்டமுத லான மண்டலந் தேடி யொன்றதொழு கான மண்டலஞ் சேட னங்கணயில் ...... கொண்டுலாவிச்
āḻi maṇṭalan tāvi yaṇṭamuta lāṉa maṇṭalan tēṭi yoṉṟatoḻu kāṉa maṇṭalañ cēṭa ṉaṅkaṇayil ...... koṇṭulāvic
சூதர் மண்டலந் தூளெ ழுந்துபொடி யாகி விண்பறந் தோட மண்டியொரு சூரி யன்திரண் டோட கண்டுநகை ...... கொண்டவேலா
cūtar maṇṭalan tūḷe ḻuntupoṭi yāki viṇpaṟan tōṭa maṇṭiyoru cūri yaṉtiraṇ ṭōṭa kaṇṭunakai ...... koṇṭavēlā
சோடை கொண்டுளங் கான மங்கைமய லாடி இந்திரன் தேவர் வந்துதொழ சோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர் ...... தம்பிரானே.
cōṭai koṇṭuḷaṅ kāṉa maṅkaimaya lāṭi intiraṉ tēvar vantutoḻa cōḻa maṇṭalañ cāru mamparvaḷar ...... tampirāṉē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).