தருவூரிசை யாரமு தார்நிகர் குயிலார்மொழி தோதக மாதர்கள் தணியாமய லாழியி லாழவு ...... மமிழாதே
taruvūricai yāramu tārnikar kuyilārmoḻi tōtaka mātarkaḷ taṇiyāmaya lāḻiyi lāḻavu ...... mamiḻātē
பாடல் 809 · பாடல் 809
pāṭal 809
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
தருவூரிசை யாரமு தார்நிகர் குயிலார்மொழி தோதக மாதர்கள் தணியாமய லாழியி லாழவு ...... மமிழாதே
taruvūricai yāramu tārnikar kuyilārmoḻi tōtaka mātarkaḷ taṇiyāmaya lāḻiyi lāḻavu ...... mamiḻātē
தழலேபொழி கோரவி லோசன மெறிபாசம காமுனை சூலமுள் சமனார்முகில் மேனிக டாவினி ...... லணுகாதே
taḻalēpoḻi kōravi lōcaṉa meṟipācama kāmuṉai cūlamuḷ camaṉārmukil mēṉika ṭāviṉi ...... laṇukātē
கருவூறிய நாளுமு நூறெழு மலதேகமு மாவலு மாசைக படமாகிய பாதக தீதற ...... மிடிதீரக்
karuvūṟiya nāḷumu nūṟeḻu malatēkamu māvalu mācaika paṭamākiya pātaka tītaṟa ...... miṭitīrak
கனிவீறிய போதமெய் ஞானமு மியலார்சிவ நேசமு மேவர கழல்சேரணி நூபுர தாளிணை ...... நிழல்தாராய்
kaṉivīṟiya pōtamey ñāṉamu miyalārciva nēcamu mēvara kaḻalcēraṇi nūpura tāḷiṇai ...... niḻaltārāy
புருகூதன்மி னாளொரு பாலுற சிலைவேடுவர் மானொரு பாலுற புதுமாமயில் மீதணை யாவரு ...... மழகோனே
purukūtaṉmi ṉāḷoru pāluṟa cilaivēṭuvar māṉoru pāluṟa putumāmayil mītaṇai yāvaru ...... maḻakōṉē
புழுகார்பனிர் மூசிய வாசனை யுரகாலணி கோலமென் மாலைய புரிநூலுமு லாவுது வாதச ...... புயவீரா
puḻukārpaṉir mūciya vācaṉai yurakālaṇi kōlameṉ mālaiya purinūlumu lāvutu vātaca ...... puyavīrā
மருவூர்குளிர் வாவிகள் சோலைகள் செழிசாலிகு லாவிய கார்வயல் மகதாபத சீலமு மேபுனை ...... வள்முதூர்
maruvūrkuḷir vāvikaḷ cōlaikaḷ ceḻicāliku lāviya kārvayal makatāpata cīlamu mēpuṉai ...... vaḷmutūr
மகதேவர்பு ராரிச தாசிவர் சுதராகிய தேவசி காமணி வழுவூரில்நி லாவிய வாழ்வருள் ...... பெருமாளே.
makatēvarpu rārica tācivar cutarākiya tēvaci kāmaṇi vaḻuvūrilni lāviya vāḻvaruḷ ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).