Skip to content

பாடல் 811 · பாடல் 811

Song 811

pāṭal 811

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

அன்னமிசைச் செந்நளிநச் சென்மிகணக் கந்நியமத் தன்னமயப் புலால்யாக்கை ...... துஞ்சிடாதென்

aṉṉamicaic cennaḷinac ceṉmikaṇak kanniyamat taṉṉamayap pulālyākkai ...... tuñciṭāteṉ

Report an error

றந்நினைவுற் றன்னினைவுற் றன்னியரிற் றன்னெறிபுக் கன்னியசற் றுலர்முச்ச ...... டங்கயோகம்

ṟanniṉaivuṟ ṟaṉṉiṉaivuṟ ṟaṉṉiyariṟ ṟaṉṉeṟipuk kaṉṉiyacaṟ ṟularmucca ...... ṭaṅkayōkam

Report an error

என்னுமருட் கின்னமுடைப் பன்னவைகற் றின்னவைவிட் டின்னணமெய்த் தடாமார்க்க ...... மின்புறாதென்

eṉṉumaruṭ kiṉṉamuṭaip paṉṉavaikaṟ ṟiṉṉavaiviṭ ṭiṉṉaṇameyt taṭāmārkka ...... miṉpuṟāteṉ

Report an error

றின்னதெனக் கென்னுமதப் புன்மைகெடுத் தின்னல்விடுத் தின்னதெனப் படாவாழ்க்கை ...... தந்திடாதோ

ṟiṉṉateṉak keṉṉumatap puṉmaikeṭut tiṉṉalviṭut tiṉṉateṉap paṭāvāḻkkai ...... tantiṭātō

Report an error

கன்னல்மொழிப் பின்னளகத் தன்னநடைப் பன்னவுடைக் கண்ணவிரச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக்

kaṉṉalmoḻip piṉṉaḷakat taṉṉanaṭaip paṉṉavuṭaik kaṇṇavirac cuṟāvīṭṭu ...... keṇṭaiyāḷaik

Report an error

கன்னமிடப் பின்னிரவிற் றுன்னுபுரைக் கன்முழையிற் கன்னிலையிற் புகாவேர்த்து ...... நின்றவாழ்வே

kaṉṉamiṭap piṉṉiraviṟ ṟuṉṉupuraik kaṉmuḻaiyiṟ kaṉṉilaiyiṟ pukāvērttu ...... niṉṟavāḻvē

Report an error

பொன்னசலப் பின்னசலச் சென்னியினற் கன்னபுரப் பொன்னிநதிக் கராநீர்ப்பு ...... யங்கனாதா

poṉṉacalap piṉṉacalac ceṉṉiyiṉaṟ kaṉṉapurap poṉṉinatik karānīrppu ...... yaṅkaṉātā

Report an error

பொன்மலையிற் பொன்னினகர்ப் புண்ணியர்பொற் பொன்மவுலிப் பொன்னுலகத் திராசாக்கள் ...... தம்பிரானே.

poṉmalaiyiṟ poṉṉiṉakarp puṇṇiyarpoṟ poṉmavulip poṉṉulakat tirācākkaḷ ...... tampirāṉē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).