Skip to content

பாடல் 817 · பாடல் 817

Song 817

pāṭal 817

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

கூர்வாய் நாராய் வாராய் போனார் கூடா ரேசற் ...... றலஆவி

kūrvāy nārāy vārāy pōṉār kūṭā rēcaṟ ...... ṟalaāvi

Report an error

கோதா னேன்மா தாமா றானாள் கோளே கேள்மற் ...... றிளவாடை

kōtā ṉēṉmā tāmā ṟāṉāḷ kōḷē kēḷmaṟ ...... ṟiḷavāṭai

Report an error

ஈர்வாள் போலே மேலே வீசா ஏறா வேறிட் ...... டதுதீயின்

īrvāḷ pōlē mēlē vīcā ēṟā vēṟiṭ ...... ṭatutīyiṉ

Report an error

ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடே றாரிற் ...... கெடலாமோ

īyā vāḻvōr pērē pāṭā īṭē ṟāriṟ ...... keṭalāmō

Report an error

சூர்வா ழாதே மாறா தேவாழ் சூழ்வா னோர்கட் ...... கருள்கூருந்

cūrvā ḻātē māṟā tēvāḻ cūḻvā ṉōrkaṭ ...... karuḷkūrun

Report an error

தோலா வேலா வீறா ரூர்வாழ் சோதீ பாகத் ...... துமையூடே

tōlā vēlā vīṟā rūrvāḻ cōtī pākat ...... tumaiyūṭē

Report an error

சேர்வாய் நீதீ வானோர் வீரா சேரா ரூரைச் ...... சுடுவார்தஞ்

cērvāy nītī vāṉōr vīrā cērā rūraic ...... cuṭuvārtañ

Report an error

சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே.

cēyē vēḷē pūvē kōvē tēvē tēvap ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).