அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு ...... விலைமாதர்
ayilār maikkaṭu viḻiyār maṭṭaikaḷ ayalār nattiṭu ...... vilaimātar
பாடல் 836 · பாடல் 836
pāṭal 836
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு ...... விலைமாதர்
ayilār maikkaṭu viḻiyār maṭṭaikaḷ ayalār nattiṭu ...... vilaimātar
அணைமீ திற்றுயில் பொழுதே தெட்டிக ளவரே வற்செய்து ...... தமியேனும்
aṇaimī tiṟṟuyil poḻutē teṭṭika ḷavarē vaṟceytu ...... tamiyēṉum
மயலா கித்திரி வதுதா னற்றிட மலமா யைக்குண ...... மதுமாற
mayalā kittiri vatutā ṉaṟṟiṭa malamā yaikkuṇa ...... matumāṟa
மறையால் மிக்கருள் பெறவே யற்புத மதுமா லைப்பத ...... மருள்வாயே
maṟaiyāl mikkaruḷ peṟavē yaṟputa matumā laippata ...... maruḷvāyē
கயிலா யப்பதி யுடையா ருக்கொரு பொருளே கட்டளை ...... யிடுவோனே
kayilā yappati yuṭaiyā rukkoru poruḷē kaṭṭaḷai ...... yiṭuvōṉē
கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழ கதிர் வேல் விட்டிடு ...... திறலோனே
kaṭalō ṭippuku mutucūr poṭṭeḻa katir vēl viṭṭiṭu ...... tiṟalōṉē
குயிலா லித்திடு பொழிலே சுற்றிய குடவா யிற்பதி ...... யுறைவோனே
kuyilā littiṭu poḻilē cuṟṟiya kuṭavā yiṟpati ...... yuṟaivōṉē
குறமா தைப்புணர் சதுரா வித்தக குறையா மெய்த்தவர் ...... பெருமாளே.
kuṟamā taippuṇar caturā vittaka kuṟaiyā meyttavar ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).