தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும் இருக்க வேறொரு பெயர்தம திடமது துவட்சி யேபெறி லவருடன் மருவிடு ...... பொதுமாதர்
toṭutta nāḷmutal maruviya iḷaiñaṉum irukka vēṟoru peyartama tiṭamatu tuvaṭci yēpeṟi lavaruṭaṉ maruviṭu ...... potumātar
பாடல் 838 · பாடல் 838
pāṭal 838
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும் இருக்க வேறொரு பெயர்தம திடமது துவட்சி யேபெறி லவருடன் மருவிடு ...... பொதுமாதர்
toṭutta nāḷmutal maruviya iḷaiñaṉum irukka vēṟoru peyartama tiṭamatu tuvaṭci yēpeṟi lavaruṭaṉ maruviṭu ...... potumātar
துவக்கி லேயடி படநறு மலரயன் வதித்த தோதக வினையுறு தகவது துறக்க நீறிட அரகர வேனவுள ...... மமையாதே
tuvakki lēyaṭi paṭanaṟu malarayaṉ vatitta tōtaka viṉaiyuṟu takavatu tuṟakka nīṟiṭa arakara vēṉavuḷa ...... mamaiyātē
அடுத்த பேர்மனை துணைவியர் தமர்பொருள் பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறு மசட்ட னாதுலன் அவமது தவிரநி ...... னடியாரோ
aṭutta pērmaṉai tuṇaiviyar tamarporuḷ perutta vāḻvitu catameṉa makiḻvuṟu macaṭṭa ṉātulaṉ avamatu tavirani ...... ṉaṭiyārō
டமர்த்தி மாமலர் கொடுவழி படஎனை யிருத்தி யேபர கதிபெற மயில்மிசை யரத்த மாமணி யணிகழ லிணைதொழ ...... அருள்தாராய்
ṭamartti māmalar koṭuvaḻi paṭaeṉai yirutti yēpara katipeṟa mayilmicai yaratta māmaṇi yaṇikaḻa liṇaitoḻa ...... aruḷtārāy
எடுத்த வேல்பிழை புகலரி தெனஎதிர் விடுத்து ராவணன் மணிமுடி துணிபட எதிர்த்து மோர்கணை விடல்தெரி கரதலன் ...... மருகோனே
eṭutta vēlpiḻai pukalari teṉaetir viṭuttu rāvaṇaṉ maṇimuṭi tuṇipaṭa etirttu mōrkaṇai viṭalteri karatalaṉ ...... marukōṉē
எருக்கு மாலிகை குவளையி னறுமலர் கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறை யெலுப்பு மாலிகை புனைசடி லவனருள் ...... புதல்வோனே
erukku mālikai kuvaḷaiyi ṉaṟumalar kaṭukkai mālikai pakirati ciṟupiṟai yeluppu mālikai puṉaicaṭi lavaṉaruḷ ...... putalvōṉē
வடுத்த மாவென நிலைபெறு நிருதனை அடக்க ஏழ்கட லெழுவரை துகளெழ வடித்த வேல்விடு கரதல ம்ருகமத ...... புயவேளே
vaṭutta māveṉa nilaipeṟu nirutaṉai aṭakka ēḻkaṭa leḻuvarai tukaḷeḻa vaṭitta vēlviṭu karatala mrukamata ...... puyavēḷē
வனத்தில் வாழ்குற மகள்முலை முழுகிய கடப்ப மாலிகை யணிபுய அமரர்கள் மதித்த சேவக வலிவல நகருறை ...... பெருமாளே.
vaṉattil vāḻkuṟa makaḷmulai muḻukiya kaṭappa mālikai yaṇipuya amararkaḷ matitta cēvaka valivala nakaruṟai ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).