Skip to content

பாடல் 843 · பாடல் 843

Song 843

pāṭal 843

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

இரத்த முஞ்சியு மூளையெ லும்புட் டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட் டிருக்கு மண்சல வீடுபு குந்திட் ...... டதில்மேவி

iratta muñciyu mūḷaiye lumpuṭ ṭacaippa cuṅkuṭal nāṭipu ṉaintiṭ ṭirukku maṇcala vīṭupu kuntiṭ ...... ṭatilmēvi

Report an error

இதத்து டன்புகல் சூதுமி குந்திட் டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட் டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் ...... டிடமாயா

itattu ṭaṉpukal cūtumi kuntiṭ ṭakaitti ṭumporu ḷācaiye ṉumpuṭ ṭeruṭṭa vunteḷi yātupa ṟantiṭ ...... ṭiṭamāyā

Report an error

பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித் துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப் பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் ...... தடிமேலாய்ப்

pirattam vantaṭu vātacu rampit tuḷaippu ṭaṉpala vāyuvu miñcip pelattai yuñcila nāḷuḷo ṭuṅkit ...... taṭimēlāyp

Report an error

பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக் குலத்தெ னும்படி கூனிய டங்கிப் பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் ...... சடமாமோ

piṭitti ṭumpala nāḷkoṭu mantik kulatte ṉumpaṭi kūṉiya ṭaṅkip picakku vantiṭu pōtupi ṉañcic ...... caṭamāmō

Report an error

தரித்த னந்தன தானன தந்தத் திமித்தி மிந்திமி தீதக் திந்தத் தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட் ...... டியல்தாளம்

taritta ṉantaṉa tāṉaṉa tantat timitti mintimi tītak tintat taṭuṭṭu ṭuṇṭuṭu ṭūṭuṭi miṇṭiṭ ...... ṭiyaltāḷam

Report an error

தனத்த குந்தகு தானன தந்தக் கொதித்து வந்திடு சூருடல் சிந்தச் சலத்து டன்கிரி தூள்படெ றிந்திட் ...... டிடும்வேலா

taṉatta kuntaku tāṉaṉa tantak kotittu vantiṭu cūruṭal cintac calattu ṭaṉkiri tūḷpaṭe ṟintiṭ ...... ṭiṭumvēlā

Report an error

சிரத்து டன்கர மேடுபொ ழிந்திட் டிரைத்து வந்தம ரோர்கள் படிந்துச் சிரத்தி னுங்கமழ் மாலைம ணம்பொற் ...... சரணோனே

cirattu ṭaṉkara mēṭupo ḻintiṭ ṭiraittu vantama rōrkaḷ paṭintuc ciratti ṉuṅkamaḻ mālaima ṇampoṟ ...... caraṇōṉē

Report an error

செகத்தி னின்குரு வாகிய தந்தைக் களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத் திருப்பெ ருந்துறை மேவிய கந்தப் ...... பெருமாளே.

cekatti ṉiṉkuru vākiya tantaik kaḷitti ṭuṅkuru ñāṉapra caṅkat tiruppe runtuṟai mēviya kantap ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).