தோடுற்றுக் காதள வோடிய வேலுக்குத் தானிக ராயெழு சூதத்திற் காமனி ராசத ...... விழியாலே
tōṭuṟṟuk kātaḷa vōṭiya vēlukkut tāṉika rāyeḻu cūtattiṟ kāmaṉi rācata ...... viḻiyālē
பாடல் 877 · பாடல் 877
pāṭal 877
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
தோடுற்றுக் காதள வோடிய வேலுக்குத் தானிக ராயெழு சூதத்திற் காமனி ராசத ...... விழியாலே
tōṭuṟṟuk kātaḷa vōṭiya vēlukkut tāṉika rāyeḻu cūtattiṟ kāmaṉi rācata ...... viḻiyālē
சோடுற்றத் தாமரை மாமுகை போலக்கற் பூரம ளாவிய தோல்முத்துக் கோடென வீறிய ...... முலைமானார்
cōṭuṟṟat tāmarai māmukai pōlakkaṟ pūrama ḷāviya tōlmuttuk kōṭeṉa vīṟiya ...... mulaimāṉār
கூடச்சிக் காயவ ரூழிய மேபற்றிக் காதலி னோடிய கூளச்சித் தாளனை மூளனை ...... வினையேனைக்
kūṭaccik kāyava rūḻiya mēpaṟṟik kātali ṉōṭiya kūḷaccit tāḷaṉai mūḷaṉai ...... viṉaiyēṉaik
கோபித்துத் தாயென நீயொரு போதத்தைப் பேசவ தாலருள் கோடித்துத் தானடி யேனடி ...... பெறவேணும்
kōpittut tāyeṉa nīyoru pōtattaip pēcava tālaruḷ kōṭittut tāṉaṭi yēṉaṭi ...... peṟavēṇum
வேடிக்கைக் காரவு தாரகு ணபத்மத் தாரணி காரண வீரச்சுத் தாமகு டாசமர் ...... அடுதீரா
vēṭikkaik kāravu tāraku ṇapatmat tāraṇi kāraṇa vīraccut tāmaku ṭācamar ...... aṭutīrā
வேலைக்கட் டாணிம காரத சூரர்க்குச் சூரனை வேல்விடு வேழத்திற் சீரரு ளூறிய ...... இளையோனே
vēlaikkaṭ ṭāṇima kārata cūrarkkuc cūraṉai vēlviṭu vēḻattiṟ cīraru ḷūṟiya ...... iḷaiyōṉē
ஆடத்தக் காருமை பாதியர் வேதப்பொற் கோவண வாடையர் ஆலித்துத் தானரு ளூறிய ...... முருகோனே
āṭattak kārumai pātiyar vētappoṟ kōvaṇa vāṭaiyar ālittut tāṉaru ḷūṟiya ...... murukōṉē
ஆடப்பொற் கோபுர மேவிய ஆடிக்கொப் பாமதிள் சூழ்பழை யாறைப்பொற் கோயிலின் மேவிய ...... பெருமாளே.
āṭappoṟ kōpura mēviya āṭikkop pāmatiḷ cūḻpaḻai yāṟaippoṟ kōyiliṉ mēviya ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).