Skip to content

பாடல் 89 · பாடல் 89

Song 89

pāṭal 89

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

மான்போற்கண் பார்வை பெற்றிடு மூஞ்சாற்பண் பாடு மக்களை வாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு ...... முலைமாதர்

māṉpōṟkaṇ pārvai peṟṟiṭu mūñcāṟpaṇ pāṭu makkaḷai vāyntāṟpoṉ kōṭu ceppeṉu ...... mulaimātar

Report an error

வாங்காத்திண் டாடு சித்திர நீங்காச்சங் கேத முக்கிய வாஞ்சாற்செஞ் சாறு மெய்த்திடு ...... மொழியாலே

vāṅkāttiṇ ṭāṭu cittira nīṅkāccaṅ kēta mukkiya vāñcāṟceñ cāṟu meyttiṭu ...... moḻiyālē

Report an error

ஏன்காற்பங் காக நற்புறு பூங்காற்கொங் காரு மெத்தையில் ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பண ...... முதல்நீதா

ēṉkāṟpaṅ kāka naṟpuṟu pūṅkāṟkoṅ kāru mettaiyil ēyntāṟpoṉ cāru poṟpaṇa ...... mutalnītā

Report an error

ஈந்தாற்கன் றோர மிப்பென ஆன்பாற்றென் போல செப்பிடும் ஈண்டாச்சம் போக மட்டிக ...... ளுறவாமோ

īntāṟkaṉ ṟōra mippeṉa āṉpāṟṟeṉ pōla ceppiṭum īṇṭāccam pōka maṭṭika ...... ḷuṟavāmō

Report an error

கான்பாற்சந் தாடு பொற்கிரி தூம்பாற்பைந் தோளி கட்கடை காண்பாற்றுஞ் சாமல் நத்திடும் ...... அசுரேசன்

kāṉpāṟcan tāṭu poṟkiri tūmpāṟpain tōḷi kaṭkaṭai kāṇpāṟṟuñ cāmal nattiṭum ...... acurēcaṉ

Report an error

காம்பேய்ப்பந் தாட விக்ரம வான்றோய்க்கெம் பீர விற்கணை காண்டேர்க்கொண் டேவு மச்சுதன் ...... மருகோனே

kāmpēyppan tāṭa vikrama vāṉṟōykkem pīra viṟkaṇai kāṇṭērkkoṇ ṭēvu maccutaṉ ...... marukōṉē

Report an error

தீம்பாற்கும் பாகு சர்க்கரை காம்பாற்செந் தேற லொத்துரை தீர்ந்தார்க்கங் காளி பெற்றருள் ...... புதல்வோனே

tīmpāṟkum pāku carkkarai kāmpāṟcen tēṟa lotturai tīrntārkkaṅ kāḷi peṟṟaruḷ ...... putalvōṉē

Report an error

தீண்பார்க்குன் போத முற்றுற மாண்டார்க்கொண் டோ து முக்கிய தேன்போற்செந் தூரில் மொய்த்தருள் ...... பெருமாளே.

tīṇpārkkuṉ pōta muṟṟuṟa māṇṭārkkoṇ ṭō tu mukkiya tēṉpōṟcen tūril moyttaruḷ ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).