கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களப மணிவன ...... மணிசேரக்
kattūri yakaru mrukamata vittāra paṭira imacala kaṟpūra kaḷapa maṇivaṉa ...... maṇicērak
பாடல் 940 · பாடல் 940
pāṭal 940
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களப மணிவன ...... மணிசேரக்
kattūri yakaru mrukamata vittāra paṭira imacala kaṟpūra kaḷapa maṇivaṉa ...... maṇicērak
கட்டார வடமு மடர்வன நிட்டூர கலக மிடுவன கச்சோடு பொருது நிமிர்வன ...... தனமாதர்
kaṭṭāra vaṭamu maṭarvaṉa niṭṭūra kalaka miṭuvaṉa kaccōṭu porutu nimirvaṉa ...... taṉamātar
கொத்தூரு நறவ மெனவத ரத்தூறல் பருகி யவரொடு கொற்சேரி யுலையில் மெழுகென ...... வுருகாமே
kottūru naṟava meṉavata rattūṟal paruki yavaroṭu koṟcēri yulaiyil meḻukeṉa ...... vurukāmē
கொக்காக நரைகள் வருமன மிக்காய விளமை யுடன்முயல் குற்றேவல் அடிமை செயும்வகை ...... யருளாதோ
kokkāka naraikaḷ varumaṉa mikkāya viḷamai yuṭaṉmuyal kuṟṟēval aṭimai ceyumvakai ...... yaruḷātō
அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதி லச்சான வயலி நகரியி ...... லுறைவேலா
attūra puvaṉa taricaṉa nittāra kaṉaka neṭumati laccāṉa vayali nakariyi ...... luṟaivēlā
அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொ டக்காகி விரக பரிபவ ...... மறவேபார்
accōve ṉavaca vuvakaiyi luṭcōrta luṭaiya paravaiyo ṭakkāki viraka paripava ...... maṟavēpār
பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடரு பற்றாய பரம பவுருஷ ...... குருநாதா
pattūrar parava viraivucel meyttūtar virava varuṭaru paṟṟāya parama pavuruṣa ...... kurunātā
பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவு மமரர்கள் ...... பெருமாளே.
paccōlai kulavu paṉaivaḷar maiccōlai mayilkaḷ naṭamiṭu paṭṭāli maruvu mamararkaḷ ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).