வஞ்சங்கொண் டுந்திட ராவண னும்பந்தென் திண்பரி தேர்கரி மஞ்சின்பண் புஞ்சரி யாமென ...... வெகுசேனை
vañcaṅkoṇ ṭuntiṭa rāvaṇa ṉumpanteṉ tiṇpari tērkari mañciṉpaṇ puñcari yāmeṉa ...... vekucēṉai
பாடல் 95 · பாடல் 95
pāṭal 95
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
வஞ்சங்கொண் டுந்திட ராவண னும்பந்தென் திண்பரி தேர்கரி மஞ்சின்பண் புஞ்சரி யாமென ...... வெகுசேனை
vañcaṅkoṇ ṭuntiṭa rāvaṇa ṉumpanteṉ tiṇpari tērkari mañciṉpaṇ puñcari yāmeṉa ...... vekucēṉai
வந்தம்பும் பொங்கிய தாகஎ திர்ந்துந்தன் சம்பிர தாயமும் வம்புந்தும் பும்பல பேசியு ...... மெதிரேகை
vantampum poṅkiya tākae tirntuntaṉ campira tāyamum vampuntum pumpala pēciyu ...... metirēkai
மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு ரங்குந்துஞ் சுங்கனல் போலவே குண்டுங்குன் றுங்கர டார்மர ...... மதும்வீசி
miñceṉṟuñ caṇṭaicey pōtuku raṅkuntuñ cuṅkaṉal pōlavē kuṇṭuṅkuṉ ṟuṅkara ṭārmara ...... matumvīci
மிண்டுந்துங் கங்களி னாலெத கர்ந்தங்கங் கங்கர மார்பொடு மின்சந்துஞ் சிந்தநி சாசரர் ...... வகைசேர
miṇṭuntuṅ kaṅkaḷi ṉāleta karntaṅkaṅ kaṅkara mārpoṭu miṉcantuñ cintani cācarar ...... vakaicēra
வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க ளுந்துந்துந் தென்றிட வேதசை ...... நிண்முளை
vuñcaṇṭaṉ teṉṟicai nāṭivi ḻuntaṅkuñ ceṉṟema tūtarka ḷuntuntun teṉṟiṭa vētacai ...... niṇmuḷai
உண்டுங்கண் டுஞ்சில கூளிகள் டிண்டிண்டென் றுங்குதி போடவு யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் ...... மருகோனே
uṇṭuṅkaṇ ṭuñcila kūḷikaḷ ṭiṇṭiṇṭeṉ ṟuṅkuti pōṭavu yarntampuṅ koṇṭuvel mātavaṉ ...... marukōṉē
தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள் தந்தென்றின் பந்தரு வீடது ...... தருவாயே
tañcantañ cañciṟi yēṉmati koñcaṅkoñ canturai yēyaruḷ tanteṉṟiṉ pantaru vīṭatu ...... taruvāyē
சங்கங்கஞ் சங்கயல் சூழ்தட மெங்கெங்கும் பொங்கம காபுநி தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் ...... பெருமாளே.
caṅkaṅkañ caṅkayal cūḻtaṭa meṅkeṅkum poṅkama kāpuni tantaṅkuñ centilil vāḻvuyar ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).