ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுதட லூதாரி பட்டொழிய ...... வுயிர்போனால்
ūṉāru muṭpiṇiyu māṉāka vittavutaṭa lūtāri paṭṭoḻiya ...... vuyirpōṉāl
பாடல் 981 · பாடல் 981
pāṭal 981
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுதட லூதாரி பட்டொழிய ...... வுயிர்போனால்
ūṉāru muṭpiṇiyu māṉāka vittavutaṭa lūtāri paṭṭoḻiya ...... vuyirpōṉāl
ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி ஓயா முழக்கமெழ ...... அழுதோய
ūrār kuvittuvara āvā veṉakkuṟuki ōyā muḻakkameḻa ...... aḻutōya
நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது நாறா தெடுத்தடவி ...... யெரியூடே
nāṉā vitaccivikai mēlē kiṭattiyatu nāṟā teṭuttaṭavi ...... yeriyūṭē
நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி நாடா தெனக்குனருள் ...... புரிவாயே
nāṇāmal vaittuviṭa nīṟāme ṉippiṟavi nāṭā teṉakkuṉaruḷ ...... purivāyē
மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடு மாயோனு மட்டொழுகு ...... மலர்மீதே
māṉāka tuttimuṭi mītē niruttamiṭu māyōṉu maṭṭoḻuku ...... malarmītē
வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும் வானோரு மட்டகுல ...... கிரியாவும்
vāḻvā yirukkumoru vētāvu meṭṭicaiyum vāṉōru maṭṭakula ...... kiriyāvum
ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு மாலால முற்றவமு ...... தயில்வோன்முன்
āṉā varakkaruṭaṉ vāṉār piḻaikkavaru mālāla muṟṟavamu ...... tayilvōṉmuṉ
ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள் ஆடானை நித்தமுறை ...... பெருமாளே.
ācāra pattiyuṭaṉ ñāṉāka mattaiyaruḷ āṭāṉai nittamuṟai ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).